சசிகலா அரசியல் விலகலுக்கு தூது அனுப்பினாரா ஈபிஎஸ்?

minister chief sasikala Palaniswami
By Jon Mar 05, 2021 12:59 PM GMT
Report

தீவிர அரசியலில் ஈடுபடுவேன் என சிறையில் இருந்து தமிழகம் வந்ததும் தனது ஆதரவாளர்களிடம் பேசிய சசிகலா, திடீரென அரசியலை விட்டு ஒதுங்கியதற்குதினமும் ஒரு தகவல் பரவி வருகிறது. அந்த வகையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அனுப்பிய தூதுதான் சசிகலாவின் அரசியல் விலகலுக்கு காரணம் என கூறப்படுகிறது.

முதல்வரிடம் இருந்து தூது சென்றவர் சசிகலாவிடம் நீங்க சொன்னபடிதான் முதல்வரும் ஆட்சியை நடத்தி வருவதாக கூறியுள்ளார். இடையில் சில காரணங்களால் தினகரனிடம் குழப்பங்கள் ஏற்பட்டுவிட்டது. அதனால்தான் (தினகரனை)வெளியேற்ற வேண்டியதாகிவிட்டது.

சசிகலா அரசியல் விலகலுக்கு தூது அனுப்பினாரா ஈபிஎஸ்? | Eps Sasikala Edappadi Tamil

பாஜக தரப்பில் சில அழுத்தங்களையும் சமாளித்துக்கொண்டு வருகிறோம். இதை புரிந்துகொள்ளாமல் ஆடிக்கொண்டிருக்கிறார் தினகரன் என தூது சென்றவர் கூற. இந்த தேர்தல் நேரத்தில் எப்படியாவது ஜெயிக்க வேண்டும் கட்டாயம் இருக்கிறது. ஜெயித்ததும், உங்களுக்கு உரிய மரியாதையை கொடுக்க இருப்பதாக முதல்வர் சொல்கிறார்.

என தூது போனவர் கூறியுள்ளார். இதனால் தான் சசிகலா அரசியலை விட்டே விலகுவதாக அறிவித்துள்ளார் என்று கூறப்படுகிறது. கொரோனாவில் இருந்து மீண்டு விடுதியில் தங்கி இருந்தபோது, சசிகலா ஒரு மேசேஜ்க்காக காத்திருப்பதாக கூறியுள்ளாராம். அந்த மெசேஜ் வராததால்தான் அரசியலுக்கு வருவேன் என தனது ஆதராவளர்கலுக்கு முன்பு கொத்தித்துள்ளார் சசிகலா. அந்த மெசேஜ் தற்போது கிடைத்த தூதுவர் மூலமாக சென்றதால் சசிகலா தற்போது அமைதியாக இருப்பதாக கூறப்படுகிறது.