உரிமைகளை அடகு வைத்துக்கொண்டிருக்கும் தூக்கத்தில் இருந்து மு.க.ஸ்டாலின் விடுபடணும் - இபிஎஸ் கேள்வி

M K Stalin Government of Tamil Nadu ADMK DMK Edappadi K. Palaniswami
By Karthick May 19, 2024 09:30 AM GMT
Report

தேர்தல் கூட்டணி ஆதாயத்திற்காக கள்ள மவுனம் சாதித்து தமிழ்நாட்டின் நதிநீர் உரிமைகளை மொத்தமாக அண்டை மாநிலங்களுக்கு அடகு வைத்துக்கொண்டிருக்கும் விடியா திமுக அரசின் முதல்வர் திரு.முக ஸ்டாலின் அவர்களின் நிர்வாக திறனற்ற ஆட்சியில் பாலாற்றில் ஆந்திர அரசு பல தடுப்பணைகளை கட்டியுள்ளது.

தடையின்றி மின்சாரம் விநியோகம் - இபிஎஸ் குற்றச்சாட்டு - தங்கம் தென்னரசு பதில்

தடையின்றி மின்சாரம் விநியோகம் - இபிஎஸ் குற்றச்சாட்டு - தங்கம் தென்னரசு பதில்

மேகதாதுவில் காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு அணை கட்ட முயற்சித்து வருகிறது.

eps request to tn cm mk stalin

இந்நிலையில் கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள #பெருகுடா பகுதியில் சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதன் மூலம் அமராவதி அணைக்கு வரும் நீரை தடுக்கும் கேரள கம்யூனிஸ்ட் அரசின் முயற்சிக்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

இனியாவது விடியா திமுக அரசின் முதலமைச்சர் திரு.முக ஸ்டாலின் அவர்கள் தூக்கத்தில் இருந்து விடுபட்டு தமிழகத்தின் உரிமைகளை நிலைநாட்ட உடனடியாக சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்துகிறேன்.