சரணடைந்தவரை என்கவுண்டர் செய்தது ஏன்? சந்தேகம் ஏற்படுகிறது - எடப்பாடி பழனிசாமி கேள்வி
திருவேங்கடம் என்கவுண்டர் எடப்பாடி பழனிசாமி கருத்து தெரிவித்துள்ளார்.
ஆம்ஸ்ட்ராங்
பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் சில நாட்களுக்கு முன்பு படுகொலை செய்யப்பட்டது தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.இந்த கொலை வழக்கில் தற்போது வரை 11 பேர் கைது செய்யப்பட்டு காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட திருவேங்கடம் என்பவர் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட போது காவல் துறையினரை தாக்கிவிட்டு தப்பி செல்ல முயன்ற பொது என்கவுண்டர் செய்யப்பட்டுள்ளார்.
எடப்பாடி பழனிசாமி
தற்போது எதிர்க்கட்சி தலைவரும் அதிமுக பொது செயலாளருமான எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். இதில் இந்த என்கவுண்டர் குறித்து கேள்வி எழுப்பப்பட்ட போது, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட திருவேங்கடம் என்பவர் என்கவுண்டர் செய்யப்பட்டுள்ளார்.
சரணடைந்தவரை வேகமாக அதிகாலையில் அழைத்து சென்றதாக ஊடகத்தில் பார்த்து தெரிந்து கொண்டேன். ஏன் அவசர அவசரமாக அதிகாலையில் அழைத்து சென்று மறைத்து வைத்திருந்த ஆயுதங்களை பறிமுதல் செய்ய வேண்டும். ஒரு கொலைக்குற்றவாளியை அழைத்து செல்லும் பொது கை விலங்கு போட்டு அழைத்து செல்ல வேண்டும் என விதி இருப்பதாக வழக்கறிஞர்கள் சொல்கிறார்கள். பாதுகாப்பாக இருந்திருக்க வேண்டும்.
இதில் ஏதோ சந்தேகம் இருப்பதாக தோன்றுகிறது. ஏற்கனவே உண்மை குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை என ஆம்ஸ்டராங் உறவினர்களும் கட்சியினரும் கூறி வருகின்றனர். இந்நிலையில் இந்த சம்பவம் நடைபெற்றுளது, மேலும் சந்தேகத்தை கிளப்பியிருக்கிறது. என எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார்.