ஜெயலலிதா பிறந்தநாள் - அதிமுக அலுவலகத்தில் கேக் வெட்டி கொண்டாடிய ஈபிஎஸ்
ஜெயலலிதாவின் 75வது பிறந்தநாளையொட்டி, அதிமுக அலுவலகத்தில் ஈபிஎஸ் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
ஜெயலலிதா பிறந்தநாள்
மறைந்த தமிழக முதலமைச்சரும், அதிமுக முன்னாள் பொதுச்செயலாளருமான ஜெ.ஜெயலலிதாவின் 75வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அதனையொட்டி, அதிமுக இடைக்காலப் பொதுச்செயலாளரும்,
தமிழக எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி சென்னை, கிரீன்வேஸ் சாலையில் உள்ள தன்னுடைய இல்லத்தில் ஜெயலலிதாவின் உருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
ஈபிஎஸ் மரியாதை
தொடர்ந்து, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஜெயலலிதாவின் திருவுருவ சிலைக்கு எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதையடுத்து எம்.ஜி.ஆர். சிலைக்கும் மாலை அணிவித்தார்.
இதனை தொடர்ந்து, ஜெயலலிதா பிறந்த நாள் மலரை வெளியிட்டு கேக் வெட்டி கொண்டாடினார். மேலும், அங்கு கூடியிருந்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கினார். இதில், முன்னாள் அமைச்சர்கள், கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.