ஆளுமை: ஜெயலலிதா 75வது பிறந்தநாள் - ஈபிஎஸ், தமிழக அரசு மரியாதை!
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்தினார்.
ஜெயலலிதா பிறந்தநாள்
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்தினார். சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள தனது இல்லத்தில் ஜெயலலிதாவின் புகைப்படத்திற்கு மலர்தூவி எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து, ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் ஜெயலலிதாவின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்கிறார். அதன்பின் அதிமுகவின் கட்சி கொடியை ஏற்றி வைத்து அதிமுக தொண்டர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும்,
மரியாதை
‘நமது அம்மா’ நாளிதழ் சார்பில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா சிறப்பு மலரையும் வெளியிட இருக்கிறார். மேலும், அதிமுக சார்பில் கண்தானம், ரத்த தானம், மருத்துவ முகாம், மாணவ, மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள், அன்னதானம், இலவச திருமணங்கள், ஆதரவற்றோர்-முதியோர் இல்லங்களில் உணவு, வேட்டி, சேலை வழங்குதல் உள்ளிட்ட
நலத்திட்ட உதவிகளுக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில், தமிழ்நாடு அரசு சார்பில் காமராஜர் சாலையில் உள்ள ஜெயலலிதா சிலைக்கு அமைச்சர்கள் மாலையணிவித்து மலர்த்தூவி மரியாதை செலுத்த உள்ளனர்.