எடப்பாடிக்கு ஆதரவாக சீறிய ஓபிஎஸ் - அதிர்ச்சியில் அதிமுக!
ஓ பன்னீர்செல்வம் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக பேசியது கவனம் பெற்றுள்ளது.
ஓபிஎஸ் - இபிஎஸ்
தமிழ்நாடு சட்டசபையில் இன்று சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது விவாதம் நடந்தது. இதனை ஆர்பி உதயகுமார் முன்மொழிந்தார்.
தீர்மானத்திற்கு ஆதரவு - 63, எதிர்ப்பு - 154 வாக்குகள் பதிவானதால் தீர்மானம் தோல்வி அடைந்தது. இந்நிலையில், கடன் வாங்காமல் இருக்க அமைத்த குழு என்ன செய்கிறது?
ஒரே நிலைப்பாடு
அந்தக் குழு சொன்னபடி நடவடிக்கை எடுத்தீர்களா?" எனக் கேள்வி கேட்ட எடப்பாடி பழனிசாமியை இடைமறித்து பதிலளிக்க நிதியமைச்சர் தங்கம் தென்னரசு முயன்றார்.
உடனே ஓ பன்னீர்செல்வம் எழுந்து, "கடனை மூலதன செலவுதான் செய்ய வேண்டும். அந்த நியதியை நீங்கள் கடைப்பிடித்தீர்களா?" என கேள்வி எழுப்பினார்.
இதனால் அவையில் ஒரு நிமிடம் அமைதி நிலவியது. இவ்வாறு இருவரும் ஒரே விஷயத்தில் ஒன்றாக நிலைப்பாடு எடுத்துள்ள சம்பவம் கவனம் பெற்றுள்ளது.