இந்த 2 கட்சிகளை மட்டும் விமர்சனம் செய்யுங்கள் - எடப்பாடி பழனிசாமி உத்தரவு
தேர்தலுக்கு தயாராகவும் எடப்பாடி பழனிசாமி கட்சி நிர்வாகிகளுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.
எடப்பாடி பழனிசாமி
அதிமுக மாவட்ட செயலாளர்களின் ஆலோசனை கூட்டம் இன்று(06.11.2024) சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் மூத்த நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
திமுக பாஜக
இந்த கூட்டத்தில் உட்கட்சி தேர்தல், 2026 சட்டமன்ற தேர்தல் கூட்டணி ஆகியவை குறித்து விவாதிகப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த கூட்டத்தில் திமுக பாஜக தவிர பிற கட்சிகளை விமர்சிக்க வேண்டாம் என எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் கட்சி பணிகளை தீவிரமாக மேற்கொள்ளவும் தேர்தலுக்கு தயாராகவும் கட்சி நிர்வாகிகளுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.
திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் விஜய்யின் தவெக கட்சியும் பரிசீலனையில் உள்ளதாக கூறப்படுகிறது.