மோடியின் வேண்டுகோள் - தனது வீட்டில் கொடியேற்றிய ஈபிஎஸ்!
அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது வீட்டில் தேசியக் கொடி ஏற்றினார்.
சுதந்திர தினம்
நாட்டின் 75 ஆவது சுதந்திர தினத்தை ஒட்டி நாட்டு மக்கள் அனைவரும் தங்கள் இல்லங்களில் தேசியக் கொடியை ஏற்றி வைக்க வேண்டும் மற்றும் சமூக வலைத்தளங்களில் பயன்படுத்தும் முகப்பு படங்களை தேசிய கொடியாக மாற்ற வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்தார்.
அதன் அடிப்படையில் பொதுமக்களும் , விளையாட்டு வீரர்கள் திரை பிரபலங்கள் என பலரும் தேசிய கொடியை சமூக வலைத்தளங்களின் பக்கங்களின் முகப்பு படங்களாக மாற்றி வருகின்றனர்.
கொடியேற்றிய ஈபிஎஸ்
அத்துடன் பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று தங்கள் இல்லங்களிலும் தேசிய கொடியை ஏற்று வருகின்றனர். அதன்படி பிரபல கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி .நடிகர் ரஜினிகாந்த் ஆகியோர் ட்விட்டர் முகப்பில் தேசியக் கொடியின் புகைப்படத்தை வைத்தனர்.
அத்துடன் நேற்று ரஜினிகாந்த் தனது வீட்டின் முன்பு தேசிய கொடியை ஏற்றி வைத்தார். இந்நிலையில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது இல்லத்தில் தேசியக்கொடியை ஏற்றியுள்ளார்.
தமிழகம் தமிழகம் உள்ளிட்ட நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் தேசிய கொடி ஏற்றி வருவது குறிப்பிடத்தக்கது.