சுகாதாரப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் - திமுக அரசுக்கு EPS வலியுறுத்தல்!

M K Stalin DMK Edappadi K. Palaniswami
By Vidhya Senthil Aug 29, 2024 04:30 PM GMT
Report
சுகாதாரத் துறையில் காலியாக உள்ள அனைத்து பணியிடங்களை உடனடியாக நிரப்ப திமுக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

எடப்பாடி பழனிசாமி  

சிங்காரச் சென்னை, சிங்கப்பூர் சென்னை என்றெல்லாம் வாய்நீளம் காட்டும் விடியா திமுக அரசின் அவலங்களில் ஒன்றாக சென்னை நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை கழிவு நீரால் சூழ்ந்து, துர்நாற்றம் வீசுவதோடு நோய்த் தொற்று ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளதாக ஊடகச் செய்திகள் வந்துள்ளன.

சுகாதாரப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் - திமுக அரசுக்கு EPS வலியுறுத்தல்! | Eps Has Urged Dmk Govt To Fill Up Health Posts

ஒரிரு நாட்களுக்கு முன்பு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை, மதுரை உட்பட காலியாக உள்ள மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் முதல்வர் பணியிடங்களை நிரப்பக் கோரிய வழக்கில், மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளுக்கு முதல்வரை நியமனம் செய்ய இயலவில்லை எனில்,

மருத்துவக்கல்லூரிகளை திறப்பது ஏன் என்று விடியா திமுக அரசுக்கு சரமாரியாகக் கேள்விகளை எழுப்பிய செய்தி ஊடகங்களில் வெளிவந்தது.

தயாநிதி மாறன் வழக்கு; நீதிமன்றத்தில் ஆஜரான எடப்பாடி பழனிசாமி - நடந்தது என்ன?

தயாநிதி மாறன் வழக்கு; நீதிமன்றத்தில் ஆஜரான எடப்பாடி பழனிசாமி - நடந்தது என்ன?

 திமுக அரசு

ஏற்கெனவே, நான் அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட பல சுகாதாரப் பணியாளர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளதைக் குறிப்பிட்டு உடனடியாக ஏற்கெனவே கொரோனா காலத்தில் பணிபுரிந்தவர்களுக்கு முக்கியத்துவம் அளித்து அனைத்து காலிப் பணியிடங்களையும் நிரப்பவும்,

சுகாதாரப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் - திமுக அரசுக்கு EPS வலியுறுத்தல்! | Eps Has Urged Dmk Govt To Fill Up Health Posts

அரசு மருத்துவமனைகளில் மருந்துப் பொருட்கள் பற்றாக்குறை குறித்தும் அறிக்கைகள் மற்றும் பேட்டிகள் வெளியிட்டிருந்தேன் என்று தெரிவித்துள்ளார். இனியாவது, சுகாதாரத் துறையில் காலியாக உள்ள அனைத்து பணியிடங்களை உடனடியாக நிரப்பவும், நோயாளிகளுக்குத் தேவைப்படும் மருந்துகளை உடனடியாக வழங்கவும்,

ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை உட்பட தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளில் காணப்படும் சுகாதார சீர்கேடுகளை போர்க்கால அடிப்படையில் சீர் செய்திடவும் விடியா திமுக அரசை வலியுறுத்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.