காவிரி விவகாரம் பற்றி எடப்பாடி பழனிசாமிக்கு எதுவும் தெரியாது...துரைமுருகன் காட்டம்!

Tamil nadu Durai Murugan Edappadi K. Palaniswami
By Swetha Jul 15, 2024 06:24 AM GMT
Report

நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் காவிரி விவகாரம் குறித்து பேசியுள்ளார்.

அமைச்சர் துரைமுருகன்

வேலூர் மாவட்டம், காட்பாடி கிறிஸ்டியான் பேட்டையில் உள்ள அரசு பெறும் தனியார் பள்ளியில் முதல்வரின் காலை உணவு திட்டத்தை துரைமுருகன் தொடங்கி வைத்தார். அப்போது அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது,

காவிரி விவகாரம் பற்றி எடப்பாடி பழனிசாமிக்கு எதுவும் தெரியாது...துரைமுருகன் காட்டம்! | Eps Doesnt Know About Cauvery Issue Duraimurugan

காவிரி நதிநீர் ஒழுங்காற்று குழு தினசரி தமிழகத்திற்கு ஒரு டி.எம்,சி தண்ணீரை திறக்க உத்தரவிட்டது. ஆனால் கர்நாடக அரசு அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி 8 ஆயிரம் கன அடி தண்ணீர் தான் விடப்படும் என்று கூறுகிறார்கள். நீதிமன்றம் உத்தரவிட்ட பின்னரும் அவர்கள் தண்ணீரை தர மறுக்கிறார்கள்.

அமைச்சர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி - என்ன உடல்நல பாதிப்பு?

அமைச்சர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி - என்ன உடல்நல பாதிப்பு?

காவிரி விவகாரம் 

முதலமைச்சருடன் கலந்து பேசி அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டுவதா? அல்லது கர்நாடக அரசுக்கு கடிதம் எழுதுவதா? என்பதை இன்று முடிவு செய்வோம். கூட்டணி என்பது வேறு காவிரி பிரச்சனை என்பதும் வேறு. அ.தி.மு.க ஆட்சியில் இருந்த போது மட்டும் அவர்களுக்கு கர்நாடக அரசு தண்ணீரை திறந்தாவிட்டது.

காவிரி விவகாரம் பற்றி எடப்பாடி பழனிசாமிக்கு எதுவும் தெரியாது...துரைமுருகன் காட்டம்! | Eps Doesnt Know About Cauvery Issue Duraimurugan

இது காலம்காலமாக உள்ள பிரச்சனை. தற்போது இதுகுறித்து கவனம் செலுத்தி வருகிறோம். எடப்பாடி பழனிசாமிக்கு இதுபற்றி எல்லாம் எதுவும் தெரியாது. கர்நாடகத்தில் தற்போது 4 அணைகளிலும் போதிய நீர் இருப்பு இருந்தும்,

அவர்கள் அலட்சியம் காட்டுகிறார்க்ள். இதற்கு நிரந்தர தீர்வை உச்சநீதிமன்றம் தான் தர வேண்டும். ஆனாலும் நீதிமன்ற தீர்ப்பை கர்நாடகா மதிக்கமாட்டேன் என்கிறார்கள் என்ன செய்வது. என்று கூறினார்.