அமைச்சர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி - என்ன உடல்நல பாதிப்பு?
Tamil nadu
DMK
Durai Murugan
By Swetha
அமைச்சர் துரைமுருகனுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.
அமைச்சர் துரைமுருகன்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக வெற்றி முகத்தை தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து சொல்ல துரைமுருகன் அறிவாலயம் வந்துள்ளார்.
அப்போது, துரைமுருகனுக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. துரைமுருகனுக்கு ரத்த சர்க்கரை அளவு குறைபாடு ஏற்பட்டதால் அவருக்கு மயக்கம் வந்துள்ளது.
உடல் நலக்குறைவு
இந்த நிலையில், அவரை அப்போலோ மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அங்கு மருத்துவர்கள் துரைமுருகனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால், அண்ணா அறிவாலயத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.