எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றும் செயல் - புத்தக விலை உயர்வுக்கு இ.பி.எஸ் கண்டனம்!

DMK Governor of Tamil Nadu Edappadi K. Palaniswami School Children
By Vidhya Senthil Aug 14, 2024 08:30 AM GMT
Report

பள்ளி பாடப் புத்தகங்கள் விலை உயர்வுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

 திமுக  அரசு

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் :அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்து, உயர்கல்வி படிக்கச் செல்லும் மாணவ, மாணவியருக்கு, மாதந்தோறும் நிதியுதவி என்ற பெயரில் நிபந்தனையுடன் சிலருக்கு கல்வி உதவித் தொகை வழங்கி, பலருக்கு கிடைக்காமல் கடும் மன வேதனையில் மாணவர்கள் இருக்கும் இச்சூழ்நிலையில்,

எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றும் செயல் - புத்தக விலை உயர்வுக்கு இ.பி.எஸ் கண்டனம்! | Eps Condemns The Price Of School Textbooks

திமுக பட்டிமன்றப் பேச்சாளர் ஒருவர் தலைமையேற்று நடத்தும் தமிழ் நாடு பாடநூல் நிறுவனம், அரசு பாடத் திட்டத்தில் படிக்கும் தனியார் பள்ளி மாணவர்களுக்கான பாடப் புத்தகங்களின் விலையை சுமார் 40 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளதாக ஊடகங்களில் செய்தி வந்துள்ளது.

வக்பு வாரிய சட்ட திருத்தம் அரசியலமைப்புக்கு எதிரானது - எடப்பாடி பழனிசாமி

வக்பு வாரிய சட்ட திருத்தம் அரசியலமைப்புக்கு எதிரானது - எடப்பாடி பழனிசாமி

விலை உயர்வு

இந்த விலை உயர்வு கடும் கண்டனத்திற்குரியது. 1-ஆம் வகுப்பு பாடப் புத்தகங்கள் ரூ. 390-ல் இருந்து ரூ. 550-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இவ்வாறு 1-ஆம் வகுப்பில் தொடங்கி 10-ஆம் வகுப்புவரை அனைத்து பாடப் புத்தகங்களின் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது.

எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றும் செயல் - புத்தக விலை உயர்வுக்கு இ.பி.எஸ் கண்டனம்! | Eps Condemns The Price Of School Textbooks

இதனால், மாநில கல்வித் திட்டத்தின்படி தனியார் பள்ளகளில் மாணவ, மாணவிகளை சேர்த்துள்ள பெற்றோர்கள் நிலை குலைந்து போயுள்ளனர். பாடப் புத்தகங்களின் விலை உயர்வு தனியார் பள்ளி மாணவர்கள் மட்டுமின்றி, போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் இளைஞர்களையும் பாதிக்கும்.

ஏற்கெனவே கடுமையான விலைவாசி உயர்வினாலும், பல மடங்கு அரசு கட்டணங்கள் உயர்வினாலும் சிரமப்பட்டுக் கொண்டிருக்கும் தமிழக மக்களின் தினசரி வாழ்வில் ‘எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றுவது போல்', தற்போது உயர்த்தப்பட்டுள்ள பள்ளி பாடப் புத்தகங்களின் விலை உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று, இந்த மக்கள் விரோத விடியா திமுக அரசை வலியுறுத்துகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.