மாபெரும் ஆர்ப்பாட்டம் நடக்கும்!! கோவை விவகாரம்...கொதித்தெழுந்த இபிஎஸ்!!

Coimbatore Edappadi K. Palaniswami
By Karthick Nov 03, 2023 06:05 AM GMT
Report

கோவை மேட்டுப்பாளைகோவை மேட்டுப்பாளையத்தில் அதிமுக வார்டு உறுப்பினர்கள் தாக்கப்பட்டத்தை தொடர்ந்து அதற்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். யத்தில் அதிமுக வார்டு உறுப்பினர்கள் தாக்கப்பட்டத்தை தொடர்ந்து அதற்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். 

என்ன நடந்தது..?  

கடந்த 31ம் தேதி கோவை மேட்டுப்பாளையம் நகராட்சியின் மாமன்ற கூட்டம் தலைவர் மெஹரீபா பர்வீன் தலைமையில் நடைபெற்றது. அந்த கூட்டத்தில், குப்பைகள் அகற்றுவது தொடர்பாக அதிமுக உறுப்பினர்கள் மற்றும் திமுக உறுப்பினர்களிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு அது பின்னர் கைகலப்பாக மாறியுள்ளது.

eps-condemns-arrest-of-admk-legislators-in-kovai

இதில், நகராட்சியின் 17வது வார்டு திமுக உறுப்பினர் ரவிக்குமார் நாற்காலி ஒன்றை அதிமுக உறுப்பினர்கள் மீது வீசியதன் காரணமாக பரபரப்பு ஏற்பட்டது. நாற்காலி தூக்கி வீசிய ரவிக்குமார் மீது நடவடிக்கை எடுக்க கோரி, அதிமுக உறுப்பினர்கள் 3 நாட்களாக கடந்த நகராட்சி அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். 

eps-condemns-arrest-of-admk-legislators-in-kovai

இந்நிலையில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கட்சி கவுன்சிலர்களை சந்திக்க மேட்டுப்பாளையம் எம்.எல்.ஏ ஏ.கே.செல்வராஜ், கவுண்டம்பாளையம் எம்.எல்.ஏ பி.ஆர்.ஜி.அருண்குமார் நூற்றுக்கும் மேற்பட்ட அதிமுகவினருடன் நகராட்சி அலுவலகத்திற்கு வருகை தந்தனர்.

எடப்பாடி கண்டனம் 

அவர்களை தடுத்து நிறுத்திய காவல் துறையினர், உள்ளே விட அனுமதி மறுத்த காரணத்தால், இரு தரப்புக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. காவல் துறையினரின் தடுப்பையும் மீறி உள்ளே செல்ல முயன்ற எம்.எல்.ஏக்கள் உள்ளிட்டவர்களையும் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த 8 அதிமுக கவுன்சிலர்களையும் காவல் துறையினர் குண்டு கட்டாக தூக்கி கைது செய்து அழைத்து சென்றனர்.

eps-condemns-arrest-of-admk-legislators-in-kovai

இதனை தொடர்ந்து தமிழகத்தின் எதிர்க்கட்சி தலைவர் மற்றும் அதிமுகவின் பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமி இது குறித்து கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், விடியா திமுக-வின் ஏவல் துறைக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். கொலைவெறித் தாக்குதல் நடத்திய திமுக நகர மன்ற உறுப்பினர்கள் மீது உடனடியாக சட்டப்படி நடவடிக்கை எடுக்க திமுக அரசை வலியுறுத்துகிறேன்.

இல்லையெனில், கோவை புறநகர் வடக்கு மாவட்டக் கழகத்தின் சார்பில், மேட்டுப்பாளையம் நகராட்சி அலுவலகம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று விடியா திமுக அரசை எச்சரிப்பதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.