நெருங்கும் நாடாளுமன்ற தேர்தல்..!! கூட்டணி விவகாரம் - கூடும் அதிமுக பொதுக்குழு கூட்டம்!!
அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கட்சியின் பொதுக்குழு கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.
அதிமுக விவகாரம்
பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறிய பிறகு வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக எக்கட்சியுடன் கூட்டணி அமைக்கும் என்ற கேள்விகள் தான் பெரும் கேள்விக்குறியான விஷயமாக உள்ளது.
அக்கட்சியின் பொதுச்செயலாளர் இது குறித்து சரியான நேரத்தில் முடிவெடுப்பார் என கட்சி நிர்வாகிகள் தெரிவித்து வரும் சூழலில், நாடாளுமன்ற தேர்தலுக்கான நாட்கள் விரைவாக நெருங்கி வருகின்றது.
சிறுபான்மை மக்களை கவர இந்த காலத்தில் பெரிய முயற்சிகளை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தீவிரம் காட்டி வருகின்றார். இந்நிலையில், தான் அக்கட்சியின் பொதுக்குழு கூட்டத்திற்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

தெருவில் நடமாட முடியாது - ஜெயலலிதா குறித்து விமர்சனம்!! கே.எஸ்.ரவிக்குமாருக்கு ஜெயக்குமார் எச்சரிக்கை!!
தேர்தலுக்கு இன்னும் 6 மாத காலமே உள்ள சூழலில், விரைவில் கூட்டணி விவகாரத்தில் ஒரு முடிவினை அதிமுக எடுக்கும் என கூறப்படுகிறது. இந்த கூட்டத்தில் இது குறித்தான முடிவுகள் தான் எடுக்கப்படும் என்றும் அரசியல் வட்டாரங்களில் கூறப்படுகிறது.
மாண்புமிகு கழக பொதுச்செயலாளர் "புரட்சித் தமிழர்" திரு. @EPSTamilNadu அவர்களின் முக்கிய அறிவிப்பு. pic.twitter.com/m0Xf7yKdZ8
— AIADMK (@AIADMKOfficial) December 8, 2023
அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் வரும் டிசம்பர் 26-ஆம் தேதி சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீ வாரு வெங்கடாசலபதி மண்டபத்தில் நடைபெறும் என்று அறியவிக்கப்பட்டுள்ளது.