எங்களுக்கு பேசக்கூட அனுமதியில்லை...சபாநாயகர் நடுநிலையாக இருக்கணும்...இபிஎஸ்!!
சபாநாயகர் இருக்கையில் அமர்ந்துள்ள அப்பாவு நடுநிலையாக நடந்து கொள்ள வேண்டும் என சட்டசபையில் இரண்டு வெளியேறிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
வெளியேறிய அதிமுக
இன்று கூடிய தமிழக சட்டசபையில், எதிர்க்கட்சி துணை தலைவர் இருக்கை குறித்து அதிமுகவினர் கடும் அமளியில் ஈடுபட நிலையில், அவர்கள் அவையில் இருந்து அதிமுகவினர் வெளியேறினார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசும் போது, சட்டப்பேரவை துணைத் தலைவர் இருக்கை நியமனம் குறித்தும், அதிமுகவில் இருந்து 3 பேர் நீக்கப்பட்டது குறித்தும், 10 முறை சட்டப்பேரவைத் தலைவரின் அறையில் கடிதம் கொடுத்திருக்கிறோம் என்றார்.
கடிதங்களின் தேதிகள், நீதிமன்ற நகல்கள் போன்றவற்றின் தேதியை குறிப்பிட்ட அவர், பத்து கடிதங்கள் கொடுக்கப்பட்டும்கூட, தங்களது கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை என குற்றம்சாட்டி, அதற்கான காரணத்தையும் தெளிவுபடுத்தவில்லை என்றார்.சபாநாயகரை தங்கள் கட்சியைச் சேர்ந்த கொறடா உள்ளிட்ட மூத்த உறுப்பினர்கள் நேரில் சந்தித்து கேட்டபோதுகூட அதற்கு சரியான பதிலை அவர் அளிக்கவில்லை என்றும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
பேச அனுமதியில்லை
அதன் காரணமாக தான் இன்று சட்டமன்றத்தில் தான் பேசியதாக குறிப்பிட்டு, தங்களது கருத்துகளை முழுமையாக தெரிவிக்க சபாநாயகர் அனுமதி அளிக்கவில்லை என்றும் தங்களுடைய கோரிக்கை நியாயமான கோரிக்கை என்றார்.
சபாநாயகருக்கான மரபை அவர் கடைபிடிக்கவில்லை என குற்றம்சாட்டிய எடப்பாடி பழனிசாமி, அவருடைய தனிப்பட்ட அதிகாரத்தில் தாங்கள் குறுக்கிடவில்லை என்று தெளிவுபடுத்தி அது சட்டப்பேரவையின் வரம்புக்கு உட்பட்டது என்று கூறி, ஆனால், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் மரபுப்படி நியமிக்கப்படவும் இல்லை என்றார்.
நடுநிலையோடு நடந்து கொள்ள வேண்டும்
இருக்கை ஒதுக்குவதையும் சபாநாயகர் நிராகரிக்கிறார் என கூறி, அதைத்தான் தாங்கள் வலியுறுத்தினோம் என்று தெளிவுபடுத்தி ஆனால் அதனை அவர் நிராகரிக்கிறார் என்று கூறி, சபாநாயகர் இருக்கை ஒரு புனிதமான ஆசனம் என்றும் அதில் அமர்ந்து அவர் நடுநிலையோடு நடந்துகொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
சபாநாயகருக்கான மரபை அவர் கடைபிடிக்கவில்லை என குற்றம்சாட்டி, அவருடைய தனிப்பட்ட அதிகாரத்தில் தாங்கள் குறுக்கிடவில்லை என கூறி, ஆனால் தங்கள் கோரிக்கை குறித்து அவர் நடுநிலையாக நடந்து கொள்ளவில்லை என்றார்.
பெண்கள், குழந்தைகள் மீது பாலியல் வன்கொடுமை,குற்றச்செயல்களில் பாரபட்சமின்றி நடவடிக்கை - முதல்வர் மு.க.ஸ்டாலின்!
எதிர்க்கட்சி துணைத் தலைவர் நியமனம் இருக்கை போன்றவற்றை குறித்தும் நீதிமன்றமே அதிமுகவில் இருந்து 3 சட்டமன்ற உறுப்பினர்கள் நீக்கப்பட்டது செல்லும் என்று தீர்ப்பளித்துள்ளத நிலையில், நீதிமன்ற தீர்ப்பின்படி, அந்த மூவரையும் சபாநாயகர் எக்கட்சியையும் சாராதவர்கள் என்று அறிவிக்க வேண்டும் என்று தனது கருத்தை எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.