தயாநிதி மாறனின் அவதூறு வழக்கு ; ஆஜரான எடப்பாடி பழனிசாமி - நீதிமன்றம் கொடுத்த ட்விஸ்ட்!

Dayanidhi Maran Chennai Edappadi K. Palaniswami Lok Sabha Election 2024
By Swetha May 14, 2024 07:49 AM GMT
Report

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீதான அவதூறு வழக்கு விசாரணை ஒத்திவைப்பு.

அவதூறு வழக்கு 

கடந்த ஏப்ரல் 15ஆம்தேதி மத்திய சென்னையின் மக்களவை தொகுதிக்குட்பட்ட எழும்பூர், புரசைவாக்கத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கூட்டணி கட்சி வேட்பாளரான தேமுதிகவின் பார்த்தசாரதியை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி.

தயாநிதி மாறனின் அவதூறு வழக்கு ; ஆஜரான எடப்பாடி பழனிசாமி - நீதிமன்றம் கொடுத்த ட்விஸ்ட்! | Eps Appears In Egmore Court

அப்போது அவர், மத்திய சென்னையின் திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்தார். அதாவது தொகுதி மேம்பட்டு நிதியில் இருந்து 75% நிதியை அவர் பயன்படுத்தவில்லை என்றும் குறிப்பிட்டார்.

நாளை தேர்தல் - இபிஎஸ் மீது பரபரப்பு வழக்கு தொடுத்த தயாநிதி மாறன்!! வழக்கு பின்னணி..?

நாளை தேர்தல் - இபிஎஸ் மீது பரபரப்பு வழக்கு தொடுத்த தயாநிதி மாறன்!! வழக்கு பின்னணி..?

எடப்பாடி பழனிசாமி

இதனையடுத்து, தன் மீது சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகள் உண்மைக்குப் புறம்பானது என்றும் வேண்டுமென்றே தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் சித்தரிக்கப்பட்டது என கண்டனம் தெரிவித்திருந்தார்.

தயாநிதி மாறனின் அவதூறு வழக்கு ; ஆஜரான எடப்பாடி பழனிசாமி - நீதிமன்றம் கொடுத்த ட்விஸ்ட்! | Eps Appears In Egmore Court

இந்த சூழலில் திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் தொடர்ந்த அவதூறு வழக்கில் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆஜரானார்.இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீதான அவதூறு வழக்கு விசாரணை ஜூன் 27ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.