அவதூறு வழக்கை போட்டு..எங்களை குரலை முடக்க முடியாது - முதலமைச்சருக்கு அண்ணாமலை பதில்

M K Stalin Tamil nadu BJP K. Annamalai
By Karthick Mar 14, 2024 10:16 AM GMT
Report

இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் மீது அவதூறு வழக்கு தொடர்ந்து இருக்கின்றார்.

அண்ணாமலை  பதிலடி

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை எக்ஸ் தளப்பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவு வருமாறு,

கோவை தொகுதியில் போட்டியிடும் அண்ணாமலை..! வெளியான முக்கிய தகவல்

கோவை தொகுதியில் போட்டியிடும் அண்ணாமலை..! வெளியான முக்கிய தகவல்

சர்வதேச போதைப் பொருள் கடத்தல் கும்பலின் தலைவனான திமுக நிர்வாகி ஜாபர் சாதிக்கின் போதைப்பொருள் கடத்தல் கும்பல் பிடிபட்டு சுமார் ஒரு மாதம் ஆகிறது. மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களே, தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் குறித்துக் கவலை தெரிவித்திருக்கிறார்.

annamalai-responds-to-mkstalin-after-filing-case

ஆனால் இது குறித்து ஒரு வார்த்தை இதுவரை பேசாத முதலமைச்சர் ஸ்டாலின், தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு அதிகரித்து விட்டது என்ற உண்மையைக் கூறியதற்காக என் மீது அவதூறு வழக்கு தொடர்ந்திருக்கிறார்.

annamalai-responds-to-mkstalin-after-filing-case

தினசரி செய்திகளைப் படிக்கும் வழக்கம் இருக்கிறதா முதலமைச்சர் அவர்களே? மக்களுக்கு திமுக ஆட்சியின் அவலம் தெரிந்து விடக் கூடாது என்பதற்காக, அவதூறு வழக்கு தொடர்ந்து எங்கள் குரலை முடக்கும் முயற்சி வெற்றி பெறாது.

தொடர்ந்து மக்கள் மத்தியில் உங்கள் அவல ஆட்சியை அம்பலப்படுத்திக்கொண்டு தான் இருப்போம். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.