கோவை தொகுதியில் போட்டியிடும் அண்ணாமலை..! வெளியான முக்கிய தகவல்

Tamil nadu Coimbatore BJP K. Annamalai
By Karthick Feb 05, 2024 01:18 AM GMT
Report

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, வரும் நாடாளுமன்ற தேர்தலில் கோவை தொகுதியில் போட்டியிடுவார் என்ற தகவல் வெளிவந்துள்ளது.

அண்ணாமலை

தமிழ்நாடு பாஜகவின் தற்போதைய முக்கியத்துவத்திற்கு அக்கட்சியின் தலைவர் அண்ணாமலை முக்கிய காரணம் என்றே கூறலாம்.

annamalai-to-contest-in-kovai-constituency-in-2024

திமுகவை அழுத்தமாக எதிர்த்து வரும் அண்ணாமலையின் கருத்துக்களை பலர் ஏற்றுக்கொண்டு அவரை குறித்து புகழ்ந்து பேச துவங்கி விட்டனர். இது தமிழ்நாடு பாஜகவின் மிக முக்கிய வளர்ச்சி என்றே கூறலாம்.

annamalai-to-contest-in-kovai-constituency-in-2024

அப்படி வளர்ந்து வரும் இளம் அரசியல் வாதியான அண்ணாமலை, வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடுகிறார் என்ற தகவல் வெளிவந்துள்ளது.

யாத்திரையை விட்டுவிட்டு அண்ணாமலை திடீர் டெல்லி பயணம் - அப்படி என்ன காரணம்?

யாத்திரையை விட்டுவிட்டு அண்ணாமலை திடீர் டெல்லி பயணம் - அப்படி என்ன காரணம்?

இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த போது பேசிய மத்திய இணையமைச்சர் எல்.முருகன், பாஜக தலைவர் அண்ணாமலை விரும்பி கோவை மக்களவை தொகுதியில் போட்டியிட்டால் நல்லதுதான் என கூறினார்.

annamalai-to-contest-in-kovai-constituency-in-2024

ஆனால் எந்தெந்த கட்சிகள் கூட்டணிக்கு வருவார்கள் என்பதும் வேட்பாளர்கள், போட்டியிடும் தொகுதிகள் குறித்து தேசிய தலைமையும் நாடாளுமன்ற குழுவும் அறிவிக்கும் என்றும் தெரிவித்தார் எல்.முருகன்.