ஹிட்லர் ஆட்சி போல நடக்கிறார்கள் - எடப்பாடி கடும் கண்டனம்!!
அவையில் இருந்து வெளியேறிய தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்த போது, திமுக அரசு மீது கடும் குற்றசாட்டுகளை வைத்தார்.
எடப்பாடி செய்தியாளர் சந்திப்பு
அவர் பேசியது வருமாறு, கருணாபுரத்தில் இதுவரை எங்களுக்குக் கிடைத்த தகவலின்படி 50 பேர் இறந்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. மருத்துவமனைகளில் 96 பேர் சிகிச்சையும், கிட்டத்தட்ட 146 பேர் கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டதாகவும் பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துமனையில் 14 பேர் மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாகவும் தகவல் கிடைத்திருக்கிறது.
சட்டமன்றத்தில் இது குறித்து பேச வேண்டும் என சபாநாயகர் அனுமதி கேட்டோம், அவர் கொடுக்கவில்லை. இந்த சமபவம் குறித்து கூட பேசவில்லை என்றால் சட்டமன்ற உறுப்பினர் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு அர்த்தமில்லை. தொடர்ந்து நாங்கள் அனுமதி கேட்டோம். அரசு முறையான சிகிச்சையும் அளிக்கப்படவில்லை.
ஹிட்லர் ஆட்சி
சபாநாயகர் எங்களை வெளியேற்றிவிட்டார். அவர் நடுநிலையோடு செயல்பட்டிருக்க வேண்டும். எதிர்க்கட்சித் துணைத்தலைவர் உதயகுமாரை அலாக்காக தூக்கி வந்து கைது செய்ய முயற்சித்தார்கள். இந்த அடக்குமுறை செயலை வன்மையாகக் கண்டிக்கிறேன். எஙக்ளை அடக்கி ஒடுக்கி நடப்பது ஹிட்லர் ஆட்சி போன்ற சர்வாதிகார ஆட்சியைப் பார்க்கிறோம்.
இதற்கெல்லாம் மக்கள் உங்களுக்கு தகுந்த பாடத்தை கொடுப்பார்கள். ஒவ்வொரு முறையும் தலைமைச் செயலகத்தில் முதல்வர் உயர் அதிகாரிகளுடன் போதை ஒழிப்பு தொடர்பாகக் கூட்டம் நடத்துகிறார். ஆனாலும், ஏன் கள்ளச்சாராயம் போன்ற போதைப் பொருள் பயன்பாடு அதிகரித்திருக்கிறது. அதற்கு காரணம் பொம்மை முதல்வரின் திறமையற்ற அரசு நிர்வாகம். நகரின் மையப்பகுதியில் 200 மீட்டர் துரத்தில் தான் காவல் நிலையத்துக்கு இருக்கு
அங்கே தான் மாவட்ட ஆட்சியாளர் அலுவலக இருக்கிறது. மக்கள் அதிகமாக நடமாடும் பகுதியிலேயே இது நடக்கிறது. உளவுத் துறை என்ன செய்து கொண்டிருக்கிறது. இப்படி நடக்கிறது என்றால் முதல்வர் ராஜினாமா செய்யவேண்டுமா? இல்லையா?
வெளிப்படை தன்மை இல்லை, சரியான மருத்துவ சிகிச்சை இல்லை, முக்கியமாக தேவைப்படும் மருந்தும் இல்லை. ஆனால், நேற்று பொதுப்பணி துறை அமைச்சர் அனைத்து மருந்தும் இருப்பது சொல்கிறார். ஆனால், அம்மருந்து இல்லை. முறையான சிகிச்சை இல்லை.