யார் தலைமை.. பொதுக்குழுவை ஒட்டி ஓபிஎஸ், ஈபிஎஸ் தனித்தனியே ஆலோசனை!
அதிமுக பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் நாளை நடைபெற உள்ளது.
ஒற்றைத் தலைமை
அதிமுகவில் தற்போது உள்ள இரட்டை தலைமையை ரத்து செய்து, ஒற்றைத் தலைமையை அமல்படுத்தி, கட்சியின் பொதுச்செயலாளர் ஆவதற்காக, எடப்பாடி பழனிச்சாமி முன்னேற்பாடுகளை செய்து வருகிறார்.
அவருக்கு 95 சதவீத நிர்வாகிகள் ஆதரவு தெரிவித்து உள்ளனர். இதற்கு பன்னீர்செல்வம் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். சென்னையில், நாளை பொதுக்குழுவை கூட்டி, தற்காலிக பொதுச்செயலாளராக பழனிசாமியை தேர்வு செய்ய முடிவு செய்து,
பொதுக்குழு கூட்டம்
பொதுக்குழுக் கூட்டத்திற்கு, அவ்ரது ஆதரவு தரப்பு ஏற்பாடு செய்துள்ளது. இந்நிலையில், அதிமுக பொதுக்குழு கூட்டம் நாளை காலை 10 மணிக்கு நடைபெற உள்ள நிலையில் எடப்பாடி பழனிசாமி மற்றும்
ஓ.பன்னீர்செல்வம் தங்கள் ஆதரவாளர்களுடன் இன்று தனித்தனியே ஆலோசனை நடத்தினர். சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள தனது இல்லத்தில் அதிமுக பொதுக்குழு உறுப்பினர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.
ஆலோசனை
அதேவேளை, தனது ஆதரவாளர்களான வைத்திலிங்கம், வெல்லமண்டி நடராஜன், மனோஜ் பாண்டியன் ஆகியோருடன் ஓ.பன்னீர் செல்வமும் ஆலோசனை நடத்தினார்.
இதனிடையே, அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்கக்கோரி ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கின் தீர்ப்பை நாளை 9 மணிக்கு சென்னை ஐகோர்ட்டு அறிவிக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.