அனைவரும் பொதுவான நீதி தான்...ஏன் பேச அனுமதி மறுக்கிறீர்கள் - எடப்பாடி பழனிசாமி கேள்வி!!
தொடர்ந்து கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் அதிமுகவினர் கடும் அமளியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
அமளி
இன்றும் அதிமுகவினர் சட்டமன்றத்தில் கடும் அமளியில் ஈடுபட்டு வருகிறார்கள். 2 நாட்கள் அவையில் இருந்து வெளியேறியவர்கள் இன்று மீண்டும் அமளியில் ஈடுபட்டு அவையில் இருந்து வெளியேறினார்கள் .
வெளியே வந்த பின்னர் செய்தியாளர்களி சந்தித்த தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசும் போது, கவர்னரிடம் கள்ளக்குறிச்சி விவகாரத்தில் உண்மை வெளிவர வேண்டும் என்பதால் மனு அளித்தோம்.
அவையில் சபாநாயகர் அரசியல் பேசுகிறார், நாங்கள் அவரை மதிக்கிறோம் என்ற அவர், தங்கள் கட்சி உறுப்பினரகளுக்கு சட்டமன்றத்தில் பேச தொடர்ந்து அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது என குற்றம்சாட்டினார்.
சஸ்பெண்ட்
5 நாட்களாக நாங்கள் கேட்கோம் பேச அனுமதி இல்லை என்று தெரிவித்து, எங்கள் உறுப்பினரை சபாநாயகர் என் பேச தடுக்கிறார் என்று வினவினார்.
சட்டசபை உறுப்பினர்கள் அனைவருக்கும் பொதுவான நீதிதான் என சுட்டிக்காட்டி, வேண்டுமென்று திட்டமிட்டு அ.தி.மு.க. வெறியேறிய பிறகு பிரச்சனை குறித்து பேசுகிறார்கள் என்றும் குற்றம்சாட்டினார்.
இந்நிலையில் தான், சபாநாயகர் அப்பாவு இந்த கூட்டத்தொடர் முடியும் வரை அதிமுகவினரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.