எப்போதும் போலவே கண்டுக்காம இருக்காதீங்க - முதல்வருக்கு இபிஎஸ் அறிவுரை

Tamil nadu Government of Tamil Nadu ADMK Edappadi K. Palaniswami Chief Minister of Tamil Nadu
By Karthick Jun 25, 2024 08:20 PM GMT
Report

ஆந்திர மாநிலத்தின் முதல்வராக பதவியேற்றுள்ள சந்திரபாபு நாயுடு, விரைவில் பாலாற்றின் குறுக்கில் தடுப்பணை கட்டப்போவதாக அறிவித்துள்ளார்.

இதற்கு கண்டனம் தெரிவித்து தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அப்பதிவு வருமாறு,    

எடப்பாடி  கண்டனம்

பாலாற்றின் குறுக்கே புதிய தடுப்பணைகள் கட்டப்படும் என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அவர்கள் தெரிவித்துள்ளதாக செய்திகள் வந்துள்ளன. ஆந்திர மாநிலத்தில் 33 கிலோமீட்டர்கள் செல்லும் பாலாறு, 222 கிலோமீட்டர் தமிழ்நாட்டில் பாய்ந்து, பின் கடலில் கலக்கிறது.

edapadi palanisamy angry

தமிழ்நாட்டின் வடமாவட்டங்கள் பெரிதும் நம்பக்கூடிய நீராதாரமான பாலாற்றின் குறுக்கே தமிழ்நாட்டின் அனுமதியின்றி தடுப்பணை கட்ட முயல்வது ஏற்புடையதல்ல.

தமிழகம் போதைப்பொருட்கள் நிறைந்த மாநிலமாக மாறியுள்ளது - ஈபிஸ் குற்றச்சாட்டு!

தமிழகம் போதைப்பொருட்கள் நிறைந்த மாநிலமாக மாறியுள்ளது - ஈபிஸ் குற்றச்சாட்டு!


முல்லைப் பெரியாறு, காவிரி-மேகதாது, பாலாறு என தொடர்ச்சியாக அண்டை மாநிலங்களிடம் தமிழ்நாட்டின் உரிமைகளை மவுனியாக இருந்து தாரைவார்க்கும் விடியா திமுக அரசின் முதல்வருக்கு எனது கடும் கண்டனம்.

கண்டும் காணாதாற்போல் 

பாலாற்றில் தமிழ்நாட்டின் உரிமைகளுக்கு மதிப்பளித்து தடுப்பணை கட்டும் முயற்சியை கைவிடுமாறு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அவர்களை வலியுறுத்துகிறேன்.  

edapadi palanisamy angry

எப்போதும் போலவே கண்டும் காணாதாற்போல் இருந்து மாநில உரிமைகளை தாரைவார்க்காமல், பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்படுவதைத் தடுக்க உரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு விடியா திமுக முதல்வர் @mkstalin அவர்களை வலியுறுத்துகிறேன்.