இன்னும் 7 வருஷம் தான் மக்களின் வாழ்க்கையே சீரழிந்து விடும் - அவசரமாக ஆளுநரை சந்தித்த இபிஎஸ்
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை இன்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி நேரில் சந்தித்துள்ளார்.
இபிஎஸ் செய்தியாளர் சந்திப்பு
போதை பொருள் புழக்கத்தை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதை வலியுறுத்தி ஆளுநரை சந்தித்தார் எடப்பாடி பழனிசாமி. அப்போது அவருடன் முன்னாள் அமைச்சரகள் இருந்தனர். ஆளுநருடனான சந்திப்பிற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசும் போது,
தமிழகத்தில் போதைப்பொருள் நடமாட்டம் அதிகரித்துள்ளது என குறிப்பிட்டு, போதைப்பொருள் சர்வ சாதாரணமாக கிடைக்கிறது என்று சுட்டிக்காட்டினார்.
ஜாஃபர் சாதிக் பணத்தை..
தமிழகத்தில் இதே நிலைமை தொடர்ந்தால் மாநிலம் சீரழிந்துவிடும் என்ற அவர், போதைப்பொருள் புழக்கம் தொடர்பாக விளக்கமான அறிக்கையை கவர்னரிடம் அளித்துள்ளோம் என்று கூறி, இது நீடித்தால் வரும் 7 ஆண்டுகளில் தமிழகம் போதைப்பொருள் நிறைந்த மாநிலமாக இருக்கும் என்றும் இதனை தடுக்க திமுக அரசு தவறிவிட்டதாக குற்றம்சாட்டினார்.
மேலும், இளைஞர்கள் - மாணவர்கள் போதைப்பொருளால் பாதிக்கப்படுகின்றனர் என்ற இபிஎஸ், போதைப்பொருள் கடத்தி வந்த பணத்தை உதயநிதி டிரஸ்டுக்கு ஜாபர் சாதிக் தந்துள்ளார்,
போதைப்பொருள் கடத்திய பணத்தில்தான் திமுக தேர்தலை சந்திப்பதாக செய்திகள் வருகின்றன என குறிப்பிட்டு, இவ்விவகாரத்தில் தமிழக காவல்துறையின் செயல்பாடு சந்தேகத்திற்கிடமாக உள்ளது என தெரிவித்தார்.