அதனை நிரூபித்தால் தண்டனை ஏற்க தயார் - ஈபிஎஸ்க்கு சவால் விட்ட முதல்வர்
பாலியல் வன்கொடுமை வழக்கு குறித்து ஈபிஎஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஈபிஎஸ் கேள்வி
தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் உரை மீதான விவாதம் நடைபெற்றது. இதில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று பேசினார்.
அப்போது அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் யார் அந்த சார் என கேள்வி எழுப்பினால் எதற்காக பதறுகிறீர்கள்? எனக் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், யாரையும் காப்பாற்ற முயற்சிக்கவில்லை. குற்றவாளிக்கு தகுந்த தண்டனை பெற்றுத்தருவோம்.
முதல்வர் பதிலடி
இதையே மீண்டும் மீண்டும் பேசினால் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை பிரச்னையை தொடங்க வேண்டியிருக்கும். பொள்ளாச்சி வழக்கில் புகார் அளித்தவுடன் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யவில்லை என்றார்.
மேலும், இந்த விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமெனில் நான் கூறியதற்கான ஆதாரத்தை நாளை சபாநாயகரிடம் வழங்குவதாகவும்,
எதிர்க்கட்சிதலைவரிடம் இருக்கும் ஆதாரத்தையும் வழங்குமாறு கேட்டுக் கொண்டார். மேலும் தான் சொல்வது தவறாக இருந்தால் நீங்கள் அறிவிக்கும் தண்டனையை ஏற்பதாக தெரிவித்தார்.