ஒரே விதமான நுழைவுத் தேர்வு..நடைமுறைக்கு ஒத்துவராது-முதல்வர் ஸ்டாலின் அதிரடி!

Madonna Sebastian M K Stalin DMK Narendra Modi India
By Vidhya Senthil Jan 21, 2025 02:26 AM GMT
Report

தமிழகத்தின் உயர்கல்வி சேர்க்கை விகிதத்தில் (47 சதவீதம்) ஏற்கெனவே நாட்டிலேயே முதன்மையாக உள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

யுஜிசி

யுஜிசியின் வரைவு நெறிமுறைகளில் உள்ள பல விதிகள் மாநிலங்களின் கல்விமுறை மற்றும் கல்விக் கொள்கைகளுக்கு முரணாக உள்ளன. இவை மாணவர்கள் மற்றும் பெற்றோர் மத்தியில் கவலையை ஏற்படுத்துகின்றன.நுழைவுத் தேர்வுகள் சமூக - பொருளாதார ரீதியாக பின்தங்கிய மாணவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

ஒரே விதமான நுழைவுத் தேர்வு..நடைமுறைக்கு ஒத்துவராது-முதல்வர் ஸ்டாலின் அதிரடி! | Entrance Exam India Not Possible Cm Stalin

நாட்டிலுள்ள மாறுபட்ட கல்வி முறைகள் மற்றும் அமைப்புகளைக் கருத்தில்கொண்டு நாடு முழுவதும் ஒரே விதமான நுழைவுத் தேர்வு என்பது நடைமுறைக்கு ஒவ்வாது. இது மாநில சுயாட்சியை குறைத்து மதிப்பிடும் வகையில் அமைந்துள்ளது.

நுழைவுத் தேர்வுகள் கட்டாயமாக்கப்பட்டால், பள்ளிகள் நுழைவுத் தேர்வுகளுக்கான பயிற்சியில் கவனம் செலுத்தக்கூடும்,இது பள்ளிக்கல்வியின் செயல்பாட்டுக்கு இடையூறு ஏற்படுத்தும். தமிழகத்தின் உயர்கல்வி சேர்க்கை விகிதத்தில் (47 சதவீதம்) ஏற்கெனவே நாட்டிலேயே முதன்மையாக உள்ளது.

வேர்களைத் தேடி திட்டம் என் மனதுக்கு நெருக்கமானது - முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ச்சி

வேர்களைத் தேடி திட்டம் என் மனதுக்கு நெருக்கமானது - முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ச்சி

இளங்கலை அல்லது முதுகலை தகுதியிலிருந்து வேறுபட்ட ஒரு துறையில் பி.எச்டி பெற்ற ஒரு விண்ணப்பதாரர் அல்லது அவர்களின் கல்வி பின்னணியிலிருந்து வேறுபட்ட பாடத்தில் நெட் அல்லது செட் தேர்ச்சி பெற்ற ஒருவர், அந்தத் துறையில் கற்பிக்கத் தகுதியுடையவர் என்று வரைவு விதிமுறைகள் முன்மொழிகின்றன.

 முதல்வர் ஸ்டாலின்

சரியான அடிப்படை பாடப்பிரிவு அறிவு இல்லாமல் பாடங்களை கற்பிக்க தனி நபர்களை அனுமதிப்பது மாணவர்களின் கற்றல் விளைவுகளுக்கு எதிர்மறையாக அமைந்துவிடும். இதுபோன்ற பல விதிகள் மாநில பல்கலைக்கழகங்களின் கல்வி ஒருமைப்பாடு,

ஒரே விதமான நுழைவுத் தேர்வு..நடைமுறைக்கு ஒத்துவராது-முதல்வர் ஸ்டாலின் அதிரடி! | Entrance Exam India Not Possible Cm Stalin

தன்னாட்சி மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கு கடுமையான சவால்களை ஏற்படுத்தக் கூடும்.எனவே, கல்வி அமைச்சகம், வரைவு மசோதாக்களை திரும்பப் பெறவும், இந்தியாவில் உள்ள மாறுபட்ட உயர்கல்வி தேவைகளுடன் சிறப்பாக ஒத்துப்போகும் வகையில் வரைவு விதிகளை மறுபரிசீலனை செய்யவும் வேண்டும்

வரைவு விதிமுறைகளை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தி கடந்த ஜன.9-ம் தேதி, தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் நகல் ஒன்றையும் தங்களின் பரிசீலனைக்கு அனுப்பி வைத்துள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.