30 ஆண்டுகள்..புகையிலை, மதுபான விற்பனைக்கு தடை விதித்த கிராமம் - எங்கு தெரியுமா?

Karnataka India
By Swetha Oct 03, 2024 12:30 PM GMT
Report

 கிராமத்தில் மதுபானம், புகையிலை பொருட்கள் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

தடை விதித்த கிராமம்

கொப்பல் மாவட்டத்தில் காமனூர் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் சுமார் 600 வீடுகள் உள்ளன. அதில் 3 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் வசித்து வருகின்றனர்.

30 ஆண்டுகள்..புகையிலை, மதுபான விற்பனைக்கு தடை விதித்த கிராமம் - எங்கு தெரியுமா? | Entire Village Banned Tobacco And Liquor Sale

இந்த கிராமத்தில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக மதுபானம், புகையிலை பொருட்கள் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் ஒரு ஓட்டல் கூட இந்த கிராமத்தில் இல்லை என்று கூறப்படுகிறது.

அதாவது கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு இந்த கிராமத்தில் புகையிலைப் பொருட்கள் மற்றும் மதுபான விற்பனை அதிகரித்து காணப்பட்டது. இதனால் கிராமத்தில் சட்டம் ஒழுங்கு சீர் கெட்டு போனது.

மக்கள் நிம்மதி இழந்து தவித்து வந்தனர். இந்த நிலையில், ஊர் பெரியவர்கள் அனைவரும் சேர்ந்து இனி கிராமத்தில் மதுபானம், புகையிலை பொருட்கள் விற்பனை செய்யக்கூடாது என்று உறுதிமொழி எடுத்தனர்.

மது விற்பனையில் மிதந்த மாநிலம்; இத்தனை கோடிகளா? களைகட்டிய விற்பனை

மது விற்பனையில் மிதந்த மாநிலம்; இத்தனை கோடிகளா? களைகட்டிய விற்பனை

எங்கு தெரியுமா?

மேலும் கிராமத்தை சேர்ந்த மக்கள் மற்றும் கடை உரிமையாளர்கள் இதற்கு ஒத்துழைப்பு தரவேண்டும் எனவும் உத்தரவிட்டனர். இதற்கு அனைவரும் சம்மதம் தெரிவித்தனர்.

30 ஆண்டுகள்..புகையிலை, மதுபான விற்பனைக்கு தடை விதித்த கிராமம் - எங்கு தெரியுமா? | Entire Village Banned Tobacco And Liquor Sale

அன்றைய தினம் முதல் இன்று வரை இந்த கிராமத்தில் மதுபாட்டிலோ, புகையிலை பொருட்களோ விற்பனை செய்யப்படவில்லை. காந்தியின் மது ஒழிப்பு கொள்கையை இன்று வரை இந்த கிராம மக்கள் கடைபிடித்து வருகின்றனர்.

இதனால் காமனூர் கிராமம் 'காந்தி கிராமம்' என்று அழைக்கப்பட்டு வருகிறது. கிராம மக்களின் இந்த செயல்பாட்டிற்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருவதுடன், இதேபோல மற்ற கிராமங்களும் மாற வேண்டும் என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.