‘எனக்கு எந்தவிதமான சம்பந்தமும் இல்லை...’ - அறிவுடன் பிரச்சனையா? - விளக்கம் கொடுத்த பாடகி தீ
'என்ஜாய் எஞ்சாமி' பாடல் சர்ச்சை
செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சியில் தெருக்குறள் அறிவு இல்லாமல் மேடையில் தீ மற்றும் மாரியம்மாள் இருவரும் என்ஜாய் எஞ்சாமி பாடலை பாடியது தற்போது சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.
சென்னை, மகாபலிபுரத்தில் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற்று வருகிறது. இதன் தொடக்கவிழாவில் கடந்த 28ம் தேதி நடைபெற்றது. அப்போது, இந்நிகழ்ச்சியில் ‘என்ஜாய் எஞ்சாமி’ பாடல் பாடப்பட்டது.
இப்பாடலை பாடகி தீ மட்டும் பாடியதால் தற்போது சர்ச்சை வெடித்துள்ளது. உண்மையில் இந்த பாடலின் ஒரிஜினல் வெர்ஷனை பாடியது தீ மற்றும் தெருக்குரல் அறிவு. ஆனால் இந்த நிகழ்ச்சியில் அறிவு பங்குபெறாதது பல்வேறு கேள்விகளை எழுப்பி சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.
தெருக்குறள் அறிவு கொடுத்த விளக்கம்
அறிவு அமெரிக்கா சென்றதால் தான் நிகழ்ச்சியில் பங்குபெறவில்லை என்று சில செய்திகள் வெளியானது,
இந்நிலையில், நேற்று இது குறித்து அறிவு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், நானே எழுதி, இயக்கி நடித்ததுதான் ‘என்ஜாய் எஞ்சாமி’. யாரும் எனக்கு இதற்கு இசையையோ, ஒரு பாடலை வரியையோ தரவில்லை. 6 மாதங்கள் இரவு பகலாக உறக்கமற்ற உழைப்பால் உருவான பாடல் அது. ஒரு வார்த்தைக்குக்கூட யாரும் பங்களிப்பு செய்யவில்லை.
நீங்கள் உறங்கிக்கொண்டிருக்கும்போது உங்களது பொக்கிஷங்கள் திருடப்படலாம். ஆனால், விழித்திருக்கும்போது அது நடக்க வாய்ப்பில்லை. ஜெய்பீம். உண்மையே இறுதியில் வெல்லும் என்று பதிவிட்டிருந்தார்.
சம்பந்தம் இல்லை
அறிவின் இந்த உருக்கமான பதிவு குறித்து பாடகி தீ மனம் திறந்து பேசியுள்ளார்.
இது குறித்து அவர், எங்களது பணி குறித்து வெளிவரும் விளம்பரங்களில் எனக்கு எந்தவிதமான சம்பந்தமும் இல்லை. "எஞ்சாயி எஞ்சாமி’ பாடலின் ஒவ்வொரு கட்டத்திலும் அறிவு மற்றும் சந்தோஷ் நாராயணன் நான் அங்கீகாரம் கொடுத்தேன். எனக்கு கிடைத்த வாய்ப்புகளில் அறிவு குறித்து பெருமையுடன் பேசியுள்ளேன். நான் இவர்கள் இருவரையும் குறைத்து மதிப்பிட்டதில்லை.
மேடையில் முன்னிலைப்படுத்தி வருகிறேன். செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சியில் நானும், அறிவும் பங்கேற்க வேண்டும் என்று நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அணுகினார்கள். அப்போது, அறிவு அமெரிக்காவில் இருந்தார்.
அதனால், அவரால் பங்கேற்க முடியவில்லை. இதனையடுத்து, அவர் குரலை நிகழ்ச்சியில் பயன்படுத்தினோம். தனது குரலுக்காகவும், பாடலில் அவரின் பங்களிப்புக்காகவும் நிகழ்வில் அறிவு பேசப்பட்டார்.
'எஞ்சாயி எஞ்சாமி' பாடலை உருவாக்கிய அனைவருக்கும் என் அடி மனதிலிருந்து நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்த பிரபஞ்சத்தின் மீதும் உயிர்கள் மீதும் கொண்டுள்ள அன்பு, மரியாதையால் சக கலைஞர்களால் 'எஞ்சாயி எஞ்சாமி' பாடல் பிறந்தது. என்னைப் பொறுத்தவரை, அது எப்போதும் அப்படியே இருக்கும். உண்மை எப்போதும் வெல்லும் என்றார்.