இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்டில் நடராஜன் இல்லை!

india cricket virat
By Jon Feb 02, 2021 09:49 AM GMT
Report

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் நடராஜன் சேர்க்கப்படவில்லை, இந்த தொடரிலிருந்து அவருக்கு ஓய்வு அளித்துள்ளது பிசிசிஐ. ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணியில், வலைப்பந்துவீச்சாளராக சென்ற நடராஜன் மூன்றுவிதமான போட்டிகளிலும் அறிமுகமாகி அசத்தினார்.

இந்நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்டில் நடராஜன் இடம்பெறவில்லை, இது தனக்கு வருத்தமாக இருக்கிறது என நடராஜன் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், கடந்த சில மாதங்களாக அணியுடனே இருந்துவிட்டு இப்போது இல்லாதது கடினமாக இருக்கிறது.

ஆனால் குடும்பத்துடன் 6 மாதங்கள் இல்லாததால், இந்த ஓய்வு எனக்கு அவசியமாகிறது, அதனை நான் புரிந்துக்கொண்டேன். ஆனால் சென்னையில் நடைபெறும் போட்டியில் இந்திய அணியில் இல்லாதது நிச்சயம் வருத்தம் தான் என தெரிவித்துள்ளார்.

மேலும் பிசிசிஐ அனுமதி அளித்தால் விஜய் ஹசாரே கோப்பை தொடரில் விளையாட விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.