42 வயதில்.. அவருக்கு பதில் சென்னை அணியில் இணையும் இங்கிலாந்து வீரர் !
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் புதிதாக இங்கிலாந்து வீரர் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இங்கிலாந்து வீரர்
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் அடுத்த அண்டு ஏப்ரலில் தொடங்கி மே மாதம் வரை நடைபெற உள்ளது. அதற்கான மெகா ஏலம் இந்த மாதம் 24, 25 ஆகிய தினங்களில் சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டா நகரில் நடைபெற இருக்கிறது. இது தொடர்பாக திகாரப்பூர்வ அறிவிப்பையும் பிசிசிஐ வெளியிட்டுள்ளது.

முன்னதாக 10 அணிகளும், தங்கள் அணியில் தக்கவைப்பட்ட வீரர்களின் பட்டியலை வெளியிட்டது. இந்த முறை நடைபெற உள்ள மெகா ஏலத்தில் பல முன்னணி வீரர்கள் கலந்து கொள்கின்றனர்.
முகமது ஷமி, கே.எல்.ராகுல், ரிஷப் பன்ட், ஸ்ரேயாஸ் ஐயர் என இந்திய அணிக்காக நடப்பில் விளையாடி வரும் வீரர்களும் ஏலத்தில் கலந்து கொள்ள உள்ளதால் மெகா ஏலத்தை ரசிகர்கள் மிகவும் எதிர்ப்பார்கின்றனர்.
சென்னை அணி
இந்நிலையில், 42 வயதான இங்கிலாந்து வீரர் ஒருவர் ஐபிஎல் தொடரில் முதல் முறையாக அறிமுகமாக ஏலத்தில் பதிவு செய்துள்ளார். அவர் இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் தான்.

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து அன்மையில் அவர் ஓய்வு பெற்ற நிலையில் 42வது வயதில் ஐபிஎல் போட்டியில் அறிமுகமாக திட்டமிட்டுள்ளார். சென்னை அணியில் விளையாடி வந்த பென் ஸ்டோக்ஸ் இந்த முறை ஐபிஎல் ஏலத்தில் முன்பதிவு செய்து கொள்ளவில்லை.
அவர் கடந்த 2023ம் ஆண்டு விளையாடினார்.காயம் காரணமாக சில ஆட்டங்களில் மட்டுமே விளையாடிய பென் ஸ்டோக்ஸ் இம்முறை கலந்துகொள்ளவில்லை. எனவே அவருக்கு பதிலாக 42 வயதான ஜேம்ஸ் ஆண்டர்சன் ஐபிஎல் ஏலத்தில் முன்பதிவு செய்துள்ளார்.
2011 மற்றும் 2012ஆம் ஆண்டு ஐபிஎல் ஏலத்தில் கலந்து கொண்ட போது அவரை யாரும் எடுக்க முன்வராத காரணத்தால் அன்சோல்டு 13 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் ஐபிஎல் ஏலத்தில் ஆண்டர்சன் மீண்டும் முன்பதிவு செய்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகை த்ரிஷா... திடீர் லண்டன் விசிட்டுக்கு இது தான் காரணம்! Manithan
மணல் அகழ்வு திட்டத்தால் பெரும் இழப்பு : ராஜித சேனாரத்னாவுக்கு வழங்கப்பட்டது குற்றப்பத்திரிகை IBC Tamil