இங்கிலாந்துடனான கடைசி டெஸ்ட்: பும்ரா விலகல்
இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியிலிருந்து இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் பும்ரா விலகியுள்ளார். இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. மூன்று போட்டிகள் தற்போது நடந்து முடிந்துள்ள நிலையில், 2-1 என இந்தியா முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில் கடைசி டெஸ்ட் போட்டியிலிருந்து, வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்ப்ரீத் பும்ரா விளையாடமாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பிசிசிஐ தன்னுடைய ட்விட்டர், சொந்தக் காரணங்களுக்காக இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் தான் விளையாட முடியாத சூழல் இருப்பதாகவும் அதனால் அணியிலிருந்து தன்னை விடுவிக்குமாறு பும்ரா கேட்டுக்கொண்டார்.
அதனால் கடைசிப் போட்டியில் அவர் விளையாடமாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீவிர மயக்கவியல் நிபுணர் பற்றாக்குறையால் நோயாளர்கள் அவதி: வவுனியா பொது மருத்துவமனையின் நிலை IBC Tamil
ஈரானுக்கு எதிராக அணு ஆயுதத்தை பயன்படுத்தப்போகும் ட்ரம்ப்: நகர்வுகளை விவரிக்கும் US முன்னாள் எம்.பி IBC Tamil
இத்தாலியிலிருந்து அழைத்துவரப்படவுள்ள கஞ்சிபானி இம்ரான்! கைது குறித்த அரசாங்கத்தின் மறைமுக அறிக்கை IBC Tamil