இங்கிலாந்து அணிக்கு அபராதம்; புள்ளி குறைப்பு - என்ன காரணம்?
இங்கிலாந்து அணி வீரர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அபராதம் விதிப்பு
இந்தியா- இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி கடந்த 10-ந்தேதி லண்டன் லார்ட்சில் தொடங்கியது.
இதில் முதல் இன்னிங்சில் இரு அணிகளும் ஒரே மாதிரி 387 ரன்கள் எடுத்தன. இதில் இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் 2 ஓவர்கள் குறைவாக வீசியதாக, மேட்ச் ரெப்ரி புகார் தெரிவித்தார். தொடர்ந்து கேப்டன் ஸ்டோக்ஸ் ஏற்றுக் கொண்டதால், முறைப்படி விசாரணை நடத்தப்படவில்லை.
மைக்கேல் வான் கொதிப்பு
இதனையடுத்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில், இங்கிலாந்து அணிக்கு 2 புள்ளி (22) குறைக்கப்பட்டது. சதவீதம் 61.11 ஆக குறைய, பட்டியலில் இங்கிலாந்து 3வது இடத்துக்கு தள்ளப்பட்டது. இலங்கை 2வது இடத்துக்கு முன்னேறியது.
இங்கிலாந்து வீரர்களுக்கு, சம்பளத்தில் 10 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டது. இந்நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள இங்கிலாந்து அணி முன்னாள் கேப்டன் மைக்கேல் வான்,
''லார்ட்சில் இரு அணிகளின் 'ஓவர் ரேட்' மிக மோசமாக இருந்தது. ஆனால் ஒரு அணியை மட்டும் விட்டுவிட்டு, மற்ற அணிக்கு எப்படி அபராதம் விதிக்கின்றனர்” என கேள்வி எழுப்பியுள்ளார்.