அறிவுடன் விளையாட மாட்டீர்களா..? மீண்டும் இப்படியா..? வெளுத்து வாங்கிய வீரர்..!
இந்திய அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 109 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ளது.
2-வது டெஸ்ட்
399 ரன்கள் இலக்கை நோக்கி களமிறங்கிய இங்கிலாந்து அணி இந்திய அணியின் பந்துவீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் 292 ரன்களில் ஆல் அவுட்டானது. இதன் மூலம் இந்திய அணி 109 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
5 போட்டிகள் கொண்ட தொடரில் 1-1 என்ற காண கணக்கிலும் இந்திய அணி சமன் செய்தது குறிப்பிடத்தக்கது. இங்கிலாந்து அணி கடந்த சில ஆண்டுகளாக BazBall என்ற யுக்தியை கடைபிடித்து வருகின்றது.

IndvsEng - இங்கிலாந்து வெற்றி - விதிமீறலா..?எதுவும் சொல்லாத நடுவர்கள்..? குற்றம்சாட்டும் ரசிகர்கள்..!
அதாவது அதிரடியாக டி20 போட்டிகளில் விளையாடுவது போன்ற ஒரு யுக்தியை அந்த அணி பயிற்சியாளராக பிரண்டன் மேக்குலம் பதவியேற்ற பிறகு கடைபிடிக்கிறது.
அறிவுடன்
சில சமயங்களில் அது அந்த அணிக்கு கைகொடுத்தாலும், டெஸ்ட் போட்டிகளில் இது சரியாக வெற்றியை ஈட்ட முடியவில்லை. நேற்றைய தோல்வியை அடுத்த இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் ஜெஃப்ரி பாய்காட், பயிற்சியாளர் மெக்குல்லம் மற்றும் பென் ஸ்டோக்ஸ் யோசிக்காமல் விளையாடி அதிரடியாக ஆடுகிறேன் என்ற யுத்தியில் பைத்தியம் ஆகிவிட்டார்கள் என கடுமையான விமர்சனத்தை முன்வைத்தார்.
எப்போதுமே அடித்து ஆட வேண்டும் அடித்து என்ற பித்து அவர்களுக்கு பிடித்து விட்டது என்று கடுமையாக சாடிய அவர், பேஸ் பால் திட்டத்தால் இங்கிலாந்து தோல்வியை தழுவினால் எங்களால் தோற்க முடியவில்லை, நாங்கள் போராடி நல்ல முறையில் தோற்க்கிறோம் என்று சப்பை கட்டு கட்டுகிறார்கள் என்றும் விமர்சனம் செய்தார்.
அதில் என்ன பெருமை இருக்கிறது என்று ஜெஃப்ரி பாய் கார்ட்ஸ் சாடி இருக்கின்றார்.