1 வீட்டை விற்று மொத்த கிராமத்தையே வாங்கிய தம்பதி - என்ன காரணம்?
தங்களுடைய வீட்டை விற்று மொத்த கிராமத்தையே தம்பதி விலைக்கு வாங்கியுள்ளனர்.
வாழ்க்கை மீது சலிப்பு
பிரிட்டன், மேன்செஸ்டர் நகரத்தைச் சேர்ந்தவர்கள் தம்பதி லிஸ் மற்றும் டேவிட் மர்பி. இருவரும் ரேடியோ நிறுவனத்தில் வேலை செய்து வந்தனர். கோவிட் லாக்டவுன் காலத்தில் அமைதியாக கிராமத்தில் இயற்கையுடன் இளைபாற வேண்டும் என முடிவு செய்துள்ளனர்.

இதனால், தங்களது 3 பெட்ரூம் வீட்டை விற்று பிரான்ஸ் நாட்டில் உள்ள lac de maison கிராமத்தையே விலை கொடுத்து வாங்கியுள்ளனர். வீட்டை 4 கோடியே 14 லட்சம் ரூபாய்க்கு விற்றுள்ளனர். அதன்பின் கிராமத்தை சுமார் 3 கோடி ரூபாய் மதிப்பில் 2021ல் வாங்கியுள்ளனர்.
கிராமத்தை வாங்கிய ஜோடி
இங்கு 400 ஆண்டுகள் பழமைவாய்ந்த 6 வீடுகள், 2 தோட்டங்கள், 3 ஏக்கர் நிலங்கள், 2 நீச்சல்குளங்கள் இருக்கின்றன. இந்த ஜோடிக்கு டாம் என்ற 12 வயது மகனும், சார்லெட் என்ற 8 வயது மகளும் உள்ளனர். புணரமைப்பு பணிகள் முடிந்த நிலையில், சொந்த கிராமத்தில் உள்ள வீட்டில் குழந்தைகளோடு குடியேறியுள்ளனர்.

இந்த தம்பதியின் வளர்ப்பு தந்தை டெர்ரி ஆகிய இருவரும் இவர்கள் வீட்டிற்கு எதிரே உள்ள மற்றொரு வீட்டில் குடியேறியுள்ளார்கள். இதுகுறித்து பேசிய லிஸ், இங்கிலாந்தில் நாங்கள் 9-5 மணி வேலையை நாள்தோறும் செய்து, குழந்தைகளுக்கு கூட நேரம் செலவிட முடியாமல் தவித்து வந்தோம். தினமும் ஒரே ஓட்டமாக வேலைகள் சென்றன.
கோவிட் காலத்தில் தான் இந்த எலி பந்தைய வாழ்க்கை மீது சலிப்பு ஏற்பட்டு இந்த மாற்றத்தை திட்டமிட்டோம். எங்கள் இருவருக்கும் பிரான்ஸ் மிகவும் பிடித்துள்ளது. சீக்கிரம் இங்குள்ள மொழி, உணவு, இயற்கை சூழலை புரிந்து கொள்ள ஆர்வமாக உள்ளோம் எனத் தெரிவித்துள்ளார்.