தனது வீட்டை விற்று இலவசமாக ஹெல்மட் வழங்கும் நபர்: காரணம் என்ன ?

By Irumporai Apr 11, 2023 10:40 AM GMT
Report

தனது சொந்த வீட்டை விற்று இலவசமாக தலைக்கவசங்கள் வழங்கிய நபரின் செயல் தற்போது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

பீகாரில் நெகிழ்ச்சி சம்பவம்

பீகாரை சேர்ந்த ராகவேந்திர குமார் என்பவர் கடந்த ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு யமுனா விரைவுச் சாலையில் டேங்கர் லாரி ஒன்று தனது இருசக்கர வாகனத்தில் மோதிய விபத்தில் அவரது நெருங்கிய நண்பர் விபத்தில் உயிரிழந்தார்.

தனது வீட்டை விற்று இலவசமாக ஹெல்மட் வழங்கும் நபர்: காரணம் என்ன ? | Man Gave Away Helmets For Free

 தலைகவசம் வழங்கும் நிகழ்வு

அதனால் தனது நண்பர்களின் நிலையாருக்கும் வரக்கூடாது என எண்ணி தனது வீட்டை விற்று நகைகளைஅடகு வைத்து தலைக்கவசம் அணியாமல் வரும் வாகன ஓட்டிகளுக்கு இது வரை 56,000 தலைக்கவசங்களை இலவசமாக வழங்கியுள்ளார். தற்போது ராகவேந்திர குமாரின் செயலை இணையவாசிகளும் சமூக ஆர்வலர்களும் பாராட்டி வருகின்றனர்.