போட்டியின் போது அஸ்வின் செய்த ஏமாற்று வேலை - இங்கிலாந்து கடும் கண்டனம்
நேற்று இந்திய அணியின் அஸ்வின் டெஸ்ட் வகை போட்டிகளில் தனது 500-வது விக்கெட்டை வீழ்த்தி அசத்தினார்.
டெஸ்ட் தொடர்
இங்கிலாந்து அணிக்கு எதிரான 3-வது டெஸ்ட் தொடரில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 445 ரன்களில் ஆல் அவுட்டாக, பின்னர் களமிறங்கிய இங்கிலாந்து அணி 2 விக்கெட்டை இழந்து 207 ரன்களை குவித்துள்ளது.
இந்த போட்டியில், இங்கிலாந்து துவக்க ஆட்டக்காரர் ஜாக் கிராவ்லியின் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் அஸ்வின் டெஸ்ட் போட்டியில் 500-வது விக்கெட்டை கைப்பற்றி அசத்தினார். அவருக்கு பலரும் தங்களது பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றார்.
இரண்டாம் நாள் ஆட்டத்தின் போது பேட்டிங் செய்த போது, ரவிச்சந்திரன் அஸ்வின் பிட்ச் மீது ஓடியதால் எச்சரிக்கை விடுத்த அம்பயர், இந்திய அணிக்கு பெனால்ட்டி கொடுத்து, இங்கிலாந்து அணிக்கு பேட்டிங் செய்யும் முன்பே 5 ரன்கள் கொடுத்தார்.
இதனை குறித்து இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் குக் கருத்து தெரிவித்துள்ளார். இது வேண்டுமென்றே செய்யப்பட்டதா? ஆம். அஸ்வின் பந்து வீசும் போது அதிக உதவியை எதிர்பார்ப்பதால் பிட்ச்சின் மையப் பகுதியை மிகவும் தந்திரமாக சேதப்படுத்தினார். இது ஏமாற்று வேலையாக இருந்தது இல்லையா?" எனக் கூறினார்.