ஒரே போட்டி மொத்த ரெகார்ட்'டும் காலி - ஆச்சரியத்தில் இங்கிலாந்து ஜாம்பவான்

Indian Cricket Team England Cricket Team Yashasvi Jaiswal Cricket Record
By Karthick Feb 19, 2024 04:38 AM GMT
Report

இந்திய அணியின் ஜெய்ஸ்வால், இங்கிலாந்து அணிக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் அடித்து அசத்தியுள்ளார்.

ஜெய்ஸ்வால் அபாரம்

இந்திய அணியின் இளம் வீரர் ஜெய்ஸ்வால் இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றார்.

england-cook-in-awe-of-jaiswal-batting

3-வது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் 10 ரன் மட்டுமே எடுத்த அவர், தனது இரண்டாவது இன்னிங்சில் 236 பந்துகளை எதிர்கொண்டு 14 ஃபோர், 12 சிக்ஸர்கள் என விளாசி 214 ரன்களை விளாசினார்.

டெஸ்ட் கிரிக்கெட் - ஜெய்ஸ்வால் அசத்தல் இரட்டை சதம்- இந்திய மண்ணில் இது..! அடுத்தடுத்த சாதனைகள்..!

டெஸ்ட் கிரிக்கெட் - ஜெய்ஸ்வால் அசத்தல் இரட்டை சதம்- இந்திய மண்ணில் இது..! அடுத்தடுத்த சாதனைகள்..!

இதே தொடரில் 2-வது டெஸ்ட் போட்டியிலும் இரட்டை சதம் அடித்து அசத்திய கிரிக்கெட் உலக ஜாம்பவான்கள் பலரும் அவரை பாராட்டி வருகின்றார்.

குக் கருத்து

அவரை குறித்து இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டனும், ஜாம்பவானான அலெஸ்டர் குக் தெரிவித்துள்ள கருத்துக்கள் வைரலாகி வருகின்றது.

england-cook-in-awe-of-jaiswal-batting

தன்னுடைய ஒட்டுமொத்த டெஸ்ட் கிரிக்கெட் கேரியரில் 11 சிக்ஸர்களை மட்டுமே அடித்துள்ளதை சுட்டிக்காட்டி பேசிய அவர், என்னுடைய ஒட்டுமொத்த டெஸ்ட் கிரிக்கெட் சிக்ஸர்களையும ஜெய்ஸ்வால் ஒரே போட்டியில் முறியடித்து விட்டார் என தெரிவித்துள்ளார்.