ஆண் நண்பருடன் பைக்கில் சென்ற மாணவி.. அடுத்து நடந்த கோரம்- நெஞ்சை உலுக்கிய சம்பவம்!
ஆண் நண்பருடன் பைக்கில் மாணவி யானை தள்ளிவிட்டு மரக்கிளை விழுந்து உயிரிழந்தார்.
மாணவி..
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் கஞ்சிக்கோடு என்னும் பகுதி அமைந்துள்ளது. அந்த பகுதியை சேர்ந்த வில்சன் என்பவரின் மகள் ஆன்மேரி(21). இவர் அங்குள்ள என்ஜினியரிங் தனியார் கல்லுரியில் பயின்று வருகிறார்.

பல்லாரிமங்கலம் பஞ்சாயத்து, அடிவாடு அருகே முல்லசேரி பகுதியை சேர்ந்தவரான அல்தாப் அபூபக்கர் (22) என்பவரும் அன்மேரியும் ஒன்றாக அதே கல்லுரியில் படித்து வருகின்றனர். நண்பர்களான இவர்கள் இருவரும் சம்பவத்தன்று பைக்கில் சென்று இருக்கிறார்கள்.
இடுக்கி சென்று இருவரும் ஒரே பைக்கில் பாலக்காட்டிற்கு திரும்பி வந்துள்ளனர். இதில் அல்தாப் அபூபக்கர் பைக்கை ஓட்ட அன்மேரி பின்னால் இருந்துள்ளார். மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய சாலை என்பதால் இருபக்கமும் மரங்கள் மற்றும் மேகக்கூட்டங்களை ரசித்தபடி இருவரும் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது சாலையோரத்தில் நின்று கொண்டிருந்த இரண்டு காட்டு யானைகள் பனைமரத்தில் நுங்குகளை சாப்பிட நினைத்தன. பிறகு பனைமரத்தை வேரோடு சாய்க்க முயற்சித்துள்ளன. காட்டு யானைகள், துதிக்கையை கொண்டு முழு பலத்துடன் பனைமரத்தை முட்டியுள்ளன.
நடந்த கோரம்
இதில் பனைமரம் இரண்டாக உடைந்து விழுந்தது. முறிந்த பனைமரம் அதன் அருகில் இருந்த ஒரு பெரிய மரத்தின் மீது விழுந்தது. இதனால் அந்த மரத்தின் கிளை முறிந்து கோதமங்கலம் அருகே இடுக்கி சாலையின் மீது விழுந்தது.

அப்போது அன்மேரியும் அவரது நண்பரும் கண் இமைக்கும் நேரத்தில் மரம், பைக்கின் மீது விழுந்தது. இதில், அன்மேரி படுகாயம் அடைந்தார். ரத்த வெள்ளத்தில் அதே இடத்தில் சுருண்டு விழுந்தார். அல்தாப் அபூபக்கர் நிலைத் தடுமாறி ஏறத்தாழ 100 அடி ஆழம் உள்ள சாலை ஓரம் உள்ள பள்ளத்தில் உருண்டு விழுந்தார்.
இதை அறிந்த வனப்பகுதியில் இருந்தவர்கள் ஓடிவந்து, இருவரையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால், தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இன்றி அன்மேரி பரிதாபமாக உயிரிழந்தார். அல்தாப் அபூபக்கருக்கு தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து வனத்துறையினரும் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.