19 பந்தில் முடிந்த மேட்ச்..இங்கிலாந்து அசுர வெற்றி - பஞ்சரான ஓமன்
ஓமான் அணிக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அணி மாபெரும் வெற்றியை பெற்றுள்ளது.
இங்கிலாந்து அசுரத்தனம்
குரூப் பி பிரிவில் நடைபெற்ற போட்டியில், டாஸ் வென்று பௌலிங்கை தேர்வு செய்த இங்கிலாந்து அணி ஓமன் அணிக்கு தொடர்ந்து நெருக்கடியை கொடுத்தது. அடுத்தடுத்த ஓமன் அணி வீரர்கள் அவுட்டாகினார்.
13 ஓவர்கள் வரையே தாக்குபிடித்த அவர்கள் வெறும் 47 ரன்னில் ஆல் அவுட்டானது. எளிய இலக்கை நோக்கி இறங்கிய இங்கிலாந்து வெறும் 3.1 ஓவர்களில் இந்த ஸ்கோரை சேஸ் செய்துள்ளது.
அதாவது வெறும் 19 பந்துகள் தான். 50 ரன்களை அந்த அணி எட்டியுள்ளது. 50/2 எடுத்த இங்கிலாந்து அணி, இந்த தொடரை தனது முதல் வெற்றியை பெற்று ரன் ரேட்டையும் அதிகரித்து கொண்டுள்ளது.
டி20 உலகக் கோப்பை வரலாற்றிலேயே மிக அதிக பந்துகள் மீதம் வைத்து சேஸிங் செய்து வெற்றி பெற்ற அணி என்ற பெருமையை அடைந்துள்ளது இங்கிலாந்து.
குரூப் பி பிரிவில் முதல் இடத்தில் ஆஸ்திரேலியா, 2-ஆம் இடத்தில ஸ்காட்லாந்து அணிகள் உள்ளது குறிப்பிடத்தக்கது. இதில், ஆஸ்திரேலியா அணி சூப்பர் 8 சுற்றிற்கு ஏற்கனவே தகுதி பெற்று விட்டது.