இனி ஆவினில் வேலைக்கு இவர்களும் விண்ணப்பிக்கலாம் - அமைச்சர் சொன்ன குட்நியூஸ்!
ஆவினில் வேலைவாய்ப்பு குறித்து அமைச்சர் மனோ தங்கராஜ் அப்டேட் கொடுத்துள்ளார்.
ஆவினில் வேலைவாய்ப்பு
பால்வளத்துறை அதிகாரிகளுடனான ஆய்வுக்கூட்டம் கோவை ரேஸ்கோர்சில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் நடைபெற்றது.
இதில், தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்துகொண்டு பால்வளத்துறையின் செயல்பாடுகள் குறித்து பேசினார். அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர்,
“ஆவின் பாலின் விற்பனை 25 சதவீதம் அதிகரித்துள்ளது. கிடாரி கன்றுகளை ஈனும் சினை ஊசி ஆரோக்கியமான பழக்கம் என நான் சொல்ல மாட்டேன். மேலை நாடுகளில் ஒரு மாடு 32 லிட்டர் பால் தரும் நிலையில், நமது நாட்டு மாடுகள் 5-6 லிட்டர் தருகிறது.
அமைச்சர் தகவல்
இதை 10-15 லிட்டராக உயர்த்தினால் விவசாயிகளுக்கு அதிக அளவில் பலன் கிடைக்கும். அதற்காக தான் நாட்டு இனங்களை கொண்டு வர முயற்சி எடுத்து வருகிறோம்.
ஆவின் நிறுவனம் செயலிழந்து எனக் கூறிய நிலையில் 36 லட்சம் லிட்டர் பால் எவ்வாறு கொள்முதல் செய்ய முடிந்தது. ஆவின் கடைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க திட்டமிட்டுள்ளோம். அந்த வகையில் மாற்றுத்திறனாளிகள், திருநங்ககளுக்கு அவற்றிற்கான வாய்ப்பினை அளிக்க உள்ளோம்.” எனத் தெரிவித்துள்ளார்.