பிரியாணிக்கு தயிர் பச்சடி கேட்டது ஒரு குத்தமா?.. அடித்தே கொன்ற ஊழியர்கள் - கொடூரம்!

Attempted Murder Hyderabad Crime Death
By Vinothini Sep 12, 2023 08:32 AM GMT
Report

இளைஞர் ஒருவர் தயிர் பச்சடி கேட்டதால் அடித்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரியாணி கடை

ஹைதராபாத்தில் உள்ள பிரபல பிரியாணி கடைக்கு லியாகத் என்பவர் தனது நண்பர்களுடன் சென்றுள்ளார். அங்கு அவர் பிரியாணி ஆர்டர் செய்து சாப்பிட்டுள்ளார், அப்பொழுது அவருக்கு குறைவாக தயிர் பச்சடி வைத்தனர்.

employees-killed-a-man-for-asking-raita

அதனால் அவர் மீண்டும் கொஞ்சம் வைக்குமாறு கேட்டுள்ளார், அதற்கு ஊழியர்கள் தர மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் இவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

கொடூரம்

இந்நிலையில், லியாகத் என்பவருக்கும், அந்த ஊழியர்களுக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் தகராறாக மாறியது. இதனையடுத்து சில ஊழியர்கள் தனியாக அவரை ஒரு அறைக்கு இழுத்துச் சென்று அடித்ததாக தெரிகிறது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் உணவகத்திற்கு வந்தனர்.

employees-killed-a-man-for-asking-raita

அப்பொழுது அந்த ஊழியர்களிடம் இருந்து லியாகத்தை மீட்ட போலீஸார், அவரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அப்பொழுது அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.