பட்டியலின பெண்ணை ஆடை அகற்றி அவமதிப்பு.. மகனை அடித்து கொன்ற கொடூரம் - அதிர்ச்சி சம்பவம்!
தாயை ஆடை அகற்றி அவமதித்து அவரது மகனை அடித்து கொன்ற கொடூர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாலியல் புகார்
மத்தியப் பிரதேச மாநிலம், சாகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் நிதின், இவருக்கு 18 வயது. இவரின் சகோதரியை விக்ரம் சிங் என்பவர் 2019-ம் ஆண்டு பாலியல் சித்ரவதை செய்தார். அப்பொழுது அந்த பெண் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரை தற்பொழுது வாபஸ் வாங்குமாறு குற்றம்சாட்டப்பட்டவர், அந்த குடும்பத்திற்கு நெருக்கடி கொடுத்து வந்தார்.
பின்னர், விக்ரம் சிங், கோமல் சிங், ஆசாத் சிங் ஆகியோர் நிதின் வீட்டிற்குச் சென்று வீட்டிலிருந்த நிதின் சகோதரி மற்றும் அவரது தாயாரிடம் பேசி வழக்கை வாபஸ் பெறும்படி கேட்டுக்கொண்டனர். ஆனால் அவர்கள் வாபஸ் வாங்க மறுத்தனர், அப்பொழுது அவரது தாயை அடித்து துன்புறுத்தியுள்ளனர்.
கொடூர கொலை
இந்நிலையில், நிதின் வீட்டில் இல்லாத சமயத்தில் இவ்வாறு அந்த கும்பல் துன்புறுத்தியுள்ளனர். பின்னர் நிதின் வந்ததும் அவரை தாக்கியுள்ளனர், இதனை தடுக்க சென்ற தாயை அடித்து ஆடையை அகற்றி அவமதித்தனர். இந்த சம்பவம் நிகழ்ந்தபொழுது நிதிநின் சகோதரி அருகில் உள்ள காட்டிற்குள் ஒளிந்துகொண்டார், அப்பொழுது போலீசுக்கு தகவல் கொடுத்துள்ளார்.
பலத்த காயம் ஏற்பட்ட நிதினை மருத்துவமனையில் அனுமதித்தனர், ஆனால் நிதின் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்தக் கொலை தொடர்பாக போலீஸார் வழக்கு பதிவுசெய்து, முக்கிய குற்றவாளி விக்ரம் சிங் உட்பட 8 பேரைக் கைதுசெய்துள்ளனர். மேலும், கிராம பஞ்சாயத்து தலைவரின் கணவர் உட்பட சிலர் தலைமறைவாக இருக்கின்றனர், அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.