சம்பளம் தராத ஐடி நிறுவன முதலாளி - ஊழியர்கள் செய்த அதிர்ச்சி செயல்
சம்பளம் தராத முதலாளியை ஊழியர்கள் செய்த செயல் அதிர்ச்சியில் ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் கிக்லீஸ் பிரைவேட் லிமிடெட் என்ற ஐடி நிறுவனம் இயங்கி வருகிறது. இந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக ரவிச்சந்திரா ரெட்டி செயல்படுகிறார். இந்நிலையில் கடந்த ஜூலை 10 தேதி ரவிச்சந்திராவின் வீட்டிற்கு நடு இரவில் வந்த மர்மநபர்கள் அவரையும் அவர் தாயாரையும் தாக்கியுள்ளனர்.
மேலும் அவரது வீட்டில் இருந்த 83 மடிக்கணினிகள், 18 செல்போன்கள், 3 பாஸ்போர்ட் ஆகியவற்றை அந்த கும்பல் திருடி சென்றுள்ளது.மேலும் ரவிச்சந்திராவையும் அந்த கும்பல் கடத்தி சென்றனர். இது தொடர்பாக ரவிசந்திராவின் தாயார் மாதவி ஜூபிலி ஹில்ஸ் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
கைது
இதனையடுத்து, ரவிச்சந்திராவை தீவிரமாக தேடி வந்த போலீசார் 4 நாட்களுக்கு பின்பு ஸ்ரீசைலம் நெடுஞ்சாலையில் உள்ள ஒரு ஹோட்டலில் கண்டுபிடித்து மீட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக 8 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
அதில், ரவிச்சந்திரா ரெட்டி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த 5 ஊழியர்களும் அடங்கும் கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 84 மடிக்கணினிகள், 6 கார்கள், 5 தொலைப்பேசிகள் மற்றும் 3 பாஸ்போர்ட்டுகள் மற்றும் ஒரு மோட்டார் சைக்கிளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
நிதி சிக்கல் காரணமாக அவரது கிக்லீஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் பணிபுரியும் 1200 ஊழியர்களுக்கு சில மாதங்களாக சம்பளம் வழங்கப்படாமல் இருந்துள்ளது. இதனால் கோபமடைந்த சில ஊழியர்கள் ரவிச்சந்திராவை திட்டம் போட்டு கடத்தியுள்ளனர் என்று காவல்துறையினரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.