லேட்டாதான் ஆபிஸ் வருவேன்.. ஸ்ட்ரிக்டா சொன்ன ஊழியர் - ஷாக்கான முதலாளி வைரல் பதிவு!

Viral Photos World Social Media
By Swetha Nov 14, 2024 03:33 AM GMT
Report

பணிக்கு தாமதமாகவே வருவேன் என நபர் ஒருவர் கூறியது படு வைரலாகி வருகிறது.

ஊழியர்

உலகம் முழுவதும் வேலையில்ல திண்டாட்டம் ஒரு பக்கம் இருந்தாலும், வேலையில் மன அழுத்தம், ஒய்வு இல்லாமல் அதிக பணி சுமையால் பல இறப்புகள் நிகழ்வதை அண்மை காலமாக அதிகரித்துள்ளது எனலாம்.

லேட்டாதான் ஆபிஸ் வருவேன்.. ஸ்ட்ரிக்டா சொன்ன ஊழியர் - ஷாக்கான முதலாளி வைரல் பதிவு! | Employee Comes Late After Staying Late At Work

பெரும்பாலான ஊழியர்கள் பணி நேரம் முடிந்த பிறகும் நிறுவனத்தில் தொடர்ந்து பணி புரிவதும், மேலதிகாரிகளிடம் அலுவலகரீதியாக தொடர்பில் இருக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. இதனால், பணியாளர்கள் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளாகின்றனர்.

அப்படி இருக்க நபர் ஒருவர் பணி நேரம் முடிந்து கூடுதல் நேரம் பணியாற்றியதற்காக, மறுநாள் பணிக்கு தாமதமாகவே வருவேன் என முதலாளியிடம் கூறியிருப்பது இணையத்தில் வைரலாகி வருகிறது.

லீவு முடிச்சி 3 நாள் ஆபிஸ் வரணும் ...இல்லனா..?? ஊழியர்களுக்கு செக் வைக்கும் IT நிறுவனங்கள்!!

லீவு முடிச்சி 3 நாள் ஆபிஸ் வரணும் ...இல்லனா..?? ஊழியர்களுக்கு செக் வைக்கும் IT நிறுவனங்கள்!!

வைரல் பதிவு

இது தொடர்பாக அலுவலகம் ஒன்றில் வேலை பார்க்கும் ஊழியர், தனது முதலாளிக்கு அனுப்பிய குறுந்தகவல் அனுப்பியுள்ளார். அதில், "வணக்கம், இன்று நான் அலுவலகத்தைவிட்டு 8.30 மணிக்குப் புறப்படுவதால் நாளை காலை 11.30 மணிக்கு அலுவலகம் வருவேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

லேட்டாதான் ஆபிஸ் வருவேன்.. ஸ்ட்ரிக்டா சொன்ன ஊழியர் - ஷாக்கான முதலாளி வைரல் பதிவு! | Employee Comes Late After Staying Late At Work

இந்த குறுந்தகவலை பார்த்ததும் முதலாளி அதனை எக்ஸ் தளத்தில் பதிவிட்டு, "என் ஜூனியர் இதை அனுப்பியதை என்னால் நம்ப முடியவில்லை. இந்தக் காலத்து இளைஞர்கள் வேற மாதிரி உள்ளனர். அவர் கூடுதல் நேரம் பணியாற்றிவிட்டு,

அதனை ஈடு செய்யும்விதமாக அலுவலகத்திற்குத் தாமதமாக வரப்போகிறார். என்னவொரு நடவடிக்கை, என்னிடம் இதை விவரிக்க வார்த்தைகளே இல்லை" எனப் பதிவிட்டுள்ளார். இந்த சம்பவம் இணையத்தில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.

நெட்டிசன்கள் பலரும் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். ஒரு சிலர், குறுந்தகவல் அனுப்பிய ஊழியர் செய்ததுதான் சரி” என தெரிவித்து அந்த ஊழியருக்கு ஆதரவாகவும் பதிவிட்டுள்ளனர்.