உணர்ச்சிவசத்தில் கண்கலங்கிய அதிமுக வேட்பாளர்

people election vote candidate aiadmk
By Jon Mar 18, 2021 02:20 PM GMT
Report

தொகுதியில் உள்ள பொதுமக்களின் கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்றியுள்ளேன் என்று அதிமுக வேட்பாளர் பேசிய போது உணர்ச்சி பொங்க கண்கலங்கினார். அதிமுக வெற்றி பெற ஆலயம் முன்பு சபதம் ஏற்ற பாட்டாளி மக்கள் கட்சியினர். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே உள்ள சேவூர் கிராமத்தில் தர்மராஜா கோவில் வளாகத்தில் நடைபெற்ற அதிமுக கூட்டணி கட்சியில் உள்ள பாட்டாளி மக்கள் கட்சியினர் வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் அதிமுக வேட்பாளர் சேவூர் ராமசந்திரன் பங்கேற்றார்.

மேலும் வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் பாமகவை சேர்ந்த அனைத்து வாக்குகளும் அதிமுக வேட்பாளர்களுக்கு பெற்று தருவதாகவும் 10.5 சதவீதம் இடஓதுக்கீடு அளித்த அதிமுகவிற்கு வாக்களிப்போம் என பேசினார்கள். பின்னர் அமைச்சரும் ஆரணி தொகுதி அதிமுக வேட்பாளருமான சேவூர் ராமசந்திரன் பேசியதாவது : கடந்த 5 ஆண்டுகளில் அமைச்சர் பொறுப்பில் இருக்கும்போது தொகுதியில் உள்ள பொதுமக்களின் கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்றியுள்ளேன்.

மேலும் எனக்கு பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்யுமாறு கூட்டணி கட்சியான பாமகவிடம் பேசும் போது திடிரென உணர்ச்சி வயப்பட்டு கண்கலங்கினார். பின்னர் பாமக நிர்வாகிகள் நிச்சியமாக பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவீர்கள் என்றும் பாமக அதற்கு துணை நிற்கும் என்று தெரிவித்து தர்மராஜா ஆலயம் முன்பு பாமகவினர் சபதம் ஏற்பதாகவும் பாமகவினர் கூறி அமைச்சரை ஆறுதல் படுத்தினார்கள்.