பேஷன் ஷோவில் மோடி, ஜோ பைடன் - வீடியோவை வெளியிட்ட எலான் மஸ்க்

Donald Trump Joe Biden Narendra Modi Kamala Harris Elon Musk
By Karthikraja Jul 22, 2024 05:57 PM GMT
Karthikraja

Karthikraja

in உலகம்
Report

 மோடி உள்ளிட்ட பிரபலங்கள் பேஷன் ஷோவில் உள்ளது போன்ற ஏஐ விடியோவை எலான் மஸ்க் பகிர்ந்துள்ளார்.

AI வீடியோ

AI எனப்படும் செயற்கை நுண்ணறிவு துறை நாளுக்கு நாள் அசுர வளர்ச்சி அடைந்து வருகிறது. இதன் மூலம் நாம் கற்பனையில் நினைப்பதை புகைப்படமாக, காணொளியாக உருவாக்க முடிகிறது. 

elon musk ai video fashion show

இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பிரபலங்களின் குரல் மாதிரி, வீடியோ மாதிரி என பல புகைப்படங்கள், ஆடியோ மற்றும் வீடியோ சமூக வலைத்தளங்களில் உலா வருகின்றன. தற்போது AI வீடியோ ஒன்றை எலான் மஸ்க் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 

அதிபர் தேர்தலிலிருந்து விலகிய ஜோ பைடன் - தமிழ்நாட்டு பூர்விகம் கொண்ட புதிய வேட்பாளர்?

அதிபர் தேர்தலிலிருந்து விலகிய ஜோ பைடன் - தமிழ்நாட்டு பூர்விகம் கொண்ட புதிய வேட்பாளர்?

எலான் மஸ்க்

உலக தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் பேஷன் ஷோ வில் கலந்து கொள்வது போன்ற வீடியோவை பகிர்ந்து "இது ஒரு AI ஃபேஷன் ஷோவுக்கான நேரம்," என பதிவிட்டுள்ளார். 

இந்த வீடியோவில், போப் பிரான்சிஸ், கைதி உடையில் டொனால்டு டிரம்ப், சக்கர நாற்காலியில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், விண்வெளி வீரர் உடையில் எலான் மஸ்க், ஆப்பிள் சிஇஓ டிம் குக், மார்க் ஜூகர்பெர்க், ஒபாமா, அமெரிக்க துணை அதிபர் கமலா ஹார்ஸ், சீன அதிபர் ஜி ஜிங்பிங், , வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன், ரஷ்ய அதிபர் புதின் என வரிசையாக நடந்து வருகின்றனர்.

மோடி 

இந்திய பிரதமர் நரேந்திர மோடி, காவி, பச்சை உள்ளிட்ட நிறங்கள் கலந்த உடையில் நெற்றியில் பொட்டு வைத்தபடி, கண்ணாடி அணிந்து நடந்து வருவதை போன்று காட்சி அளிக்கிறார்.

கடைசியாக, மைக்ரோசாஃப்ட் கடந்த வாரம் முடங்கியதை கிண்டலடிக்கும் வகையில், டெத் ஆஃப் ப்ளூ ஸ்கிரீன் கணினியுடன் அந்நிறுவனத்தின் நிறுவனர் பில் கேட்ஸ் நடந்து வருவது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது.