முட்டாள்தனமான நபர் கிடைத்தால்..CEO பதவியில் இருந்து விலகுவேன் - எலான் மஸ்க் அதிரடி!

Twitter Elon Musk
By Sumathi Dec 21, 2022 04:54 AM GMT
Report

எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தின் தலைமை பதவியில் இருந்து விரைவில் விலகுவதாக தெரிவித்துள்ளார்.

எலான் மஸ்க்

பிரபல சமூக வலைத்தளமான ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் ரூ 3.6 லட்சம் கோடிக்கு வாங்கினார். அப்போதே எலான் மஸ்க் அதிரடி நடவடிக்கையில் இறங்கினார் . தலைமை செயல் அதிகாரி பராக் அகர்வால், சட்டப்பிரிவு தலைவர் விஜயா காட்டே போன்ற உயர்மட்ட நிர்வாகிகள் அதிரடியாக நீக்கப்பட்டனர்.

முட்டாள்தனமான நபர் கிடைத்தால்..CEO பதவியில் இருந்து விலகுவேன் - எலான் மஸ்க் அதிரடி! | Elon Musks Response Twitter His Exit As Ceo

மேலும், ட்விட்டரில் ப்ளுடிக் பெறுவதற்கு கட்டணம் என்ற புதிய முறையினையும் எலான் மஸ்க் கொண்டுவந்துள்ளார். இந்நிலையில், தான் தலைமை செயல் அதிகாரி பதவியில் இருந்து விலக வேண்டுமா எனக் கேட்டு பயனர்களை கருத்துக் கூறுமாறு கேட்டிருந்தார்.

விரைவில்..

மேலும் பயனர்களின் முடிவிற்கு தான் கட்டுப்படுவதாகவும் கூறியிருந்தார். இவரது கேள்விக்கு சுமார் 1 கோடியே 75 லட்சம் பேர் வாக்களித்துள்ளனர். அதில் 57 விழுக்காடு பேர் எலான் மஸ்க் பதவி விலக வேண்டும் என வாக்களித்துள்ளனர்.

அதன்படி, ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், மிக விரைவில் இன்னொரு ஆள் சிஇஓவாக கிடைத்தவுடன் நான் பதவி விலகுவேன் என அதிரடியாக அறிவித்துள்ளார்.