ஆட்களை குறைக்கும் ட்விட்டர் : இந்தியாவில் அதிக ஊழியர்கள் நீக்கம் அலுவலகத்துக்கு வர தடை

Twitter Elon Musk
By Irumporai Nov 05, 2022 04:02 AM GMT
Report

ட்விட்டர் நிறுவனம் ஆட்களை குறைக்கும் செயலில் இறங்கியுள்ளது, குறிப்பாக ட்விட்டர் நிறுவனத்திக் பணியாற்றும் இந்திய ஊழியர்கள் அதிக அளவில் நீக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

 எலான் மஸ்க் வாங்கிய ட்விட்டர்

பிரபல சமூக வலைத்தளமான ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் ரூ 3.6 லட்சம் கோடிக்கு வாங்கினார். அப்போதே எலான் மஸ்க் அதிரடி நடவடிக்கையில் இறங்கினார் .

ஆட்களை குறைக்கும் ட்விட்டர் : இந்தியாவில் அதிக ஊழியர்கள் நீக்கம் அலுவலகத்துக்கு வர தடை | Musk Fires Twitter S India Staff

ட்விட்டர் தனது வசம் வந்தவுடனே ட்விட்டர் தலைமை செயல் அதிகாரி பராக் அகர்வால் , சட்டப்பிரிவு தலைவர் விஜயா காட்டே போன்ற உயர்மட்ட நிர்வாகிகள் அதிரடியாக நீக்கப்பட்டனர்.

ட்விட்டருக்கு கட்டணம் 

மேலும், ட்விட்டரில் ப்ளுடிக் பெறுவதற்கு கட்டணம் என்ற புதிய முறையினையும் எலான் மஸ்க் கொண்டுவந்துள்ளார். இந்த நிலையில் ட்விட்டர் நிறுவனம் ஏற்கனவே அறிவித்த படி ஆட் குறைப்பு நடவடிக்கையில் இறங்கியுள்ளது , அதன்படி நேற்று முன் தினம் தனது ஊழியர்களுக்கு இமெயில் அனுப்பியுள்ளது.

ஆட்களை குறைக்கும் ட்விட்டர் : இந்தியாவில் அதிக ஊழியர்கள் நீக்கம் அலுவலகத்துக்கு வர தடை | Musk Fires Twitter S India Staff

இந்தியர்கள் நீக்கப்பட வாய்ப்பு

அதில் ஊழியர்கள் யாரும் அலுவலகம் வர வேண்டாம் நீங்கள் வேலையில் இருப்பீர்களா இல்லையா என்பது குறித்து உங்களுக்கு தகவல் அனுப்படும் என ட்விட்டர் மெயில் அனுப்பியதாக தகவல்கள் வெளியானது. குறிப்பாக ட்விட்டரிலிருந்து இந்திய ஊழியர்கள் அதிகம் நீக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.