பெண் நண்பருடன் 3-வது முறையாக குழந்தை பெற்ற மாஸ்க்!! மொத்தமாக 12 குழந்தைகள்
எலான் மஸ்க்
உலகத்தில் பெரும் ஆதிக்கம் செலுத்துபவர்களில் சிலர் மட்டுமே உள்ளார்.அப்படி இருப்பவர்களில் தற்போதைய காலகட்டத்தில் முக்கியமான இடத்தில் இருப்பவர் எலன் மாஸ்க்.
உலகின் மிக பெரிய பணக்காரர்களில் ஒருவராக திகழும் மாஸ்க், ட்விட்டர் நிறுவனத்தையும் வாங்கி, மீண்டும் உலகளவில் சலசலப்பை ஏற்படுத்தினார். எலோன் மஸ்க் நியூராலிங்க் நிர்வாகி ஷிவோன் ஜிலிஸுடன் தனது மூன்றாவது குழந்தையை பெற்றுக்கொண்டுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
12-வது குழந்தை
ஏற்கனவே இக்குழந்தைகள் 2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பிறந்த ஜிலிஸுடன் இரட்டைக் குழந்தைகளான ஸ்ட்ரைடர் மற்றும் அஸூர் ஆகியோருக்கு தந்தையாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் அவருக்கு 11 குழந்தைகள் இருப்பதாக பகிரங்கமாக அறியப்பட்டாலும், அவரது மொத்த குழந்தைகளின் எண்ணிக்கையை வெளியிடவில்லை. தற்போது பிறந்துள்ள குழந்தை அவரின் 12-வது குழந்தை என கூறப்படுகிறது.
ஏற்கனவே ஜிலிஸுடன் இரட்டைக் குழந்தைகளைப் பெற்றுள்ள மஸ்க், குழந்தைகளின் கடைசிப் பெயர்களைத் தனக்குப் பொருந்துமாறு மாற்ற நீதிமன்ற உத்தரவைக் கோரினார், அதே நேரத்தில் அவர்களின் தாயின் கடைசிப் பெயரையும் அவர்களின் நடுப் பெயர்களில் இணைத்துக்கொண்டதாக பொதுப் பதிவுகள் காட்டுகின்றன.
SpaceX'இல் பெண் ஊழியர்களுடன் மஸ்க் தகாத உறவில் ஈடுபட்டதாக WallStreetJournals அறிக்கை வெளியான சில நாட்களுக்குப் பிறகு மூன்றாவது குழந்தை பற்றிய அறிவிப்பு வந்தது. SpaceX முன்னாள் ஊழியர் ஒருவர், மஸ்க் தன்னுடன் குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளுமாறு அடிக்கடி கேட்டுக்கொண்டதாகக் கூறினார்.