EVM'ஐ ஒழிக்கணும்!! மத்திய அமைச்சரிடம் மல்லுக்கட்டிய மஸ்க்..முட்டுக்கொடுத்த ராகுல்

Rahul Gandhi Elon Musk India
By Karthick Jun 16, 2024 10:13 AM GMT
Report

வாக்குப்பதிவு இயந்திரங்கள்

இந்தியாவில் எப்போதும் தேர்தல் வரும்போது வாக்கு பதிவு இயந்திரங்கள் மீதான நம்பகத்தன்மை எழுந்து விடும். குறிப்பாக எதிர்க்கட்சிகள் வாக்குப்பதிவு இயந்திரங்களை ஹேக் செய்து விடாமல் என நடந்து முடிந்த மக்களவை தேர்தலின் போது பல முறை குற்றம்சாட்டின.

electronic Voting machine

ஆனால், அது தொடர்பாக எந்தவித கவலையும் வேண்டாம் என தேர்தல் ஆணையம் கூறி வருகின்றது. அப்படியெல்லாம் இந்த இயந்திரத்தை ஹேக் செய்து விட முடியாது என பல விளக்கங்களும் வெளியாகின.

தொடர்ந்து சரியும் மதிப்பு - உலக பணக்காரர் என்ற அந்தஸ்தை இழந்த எலான் மஸ்க்..? முதலிடத்தில் இவரா..?

தொடர்ந்து சரியும் மதிப்பு - உலக பணக்காரர் என்ற அந்தஸ்தை இழந்த எலான் மஸ்க்..? முதலிடத்தில் இவரா..?

எலான் மஸ்க் அட்வைஸ்

இந்த நிலையில், தான் இது தொடர்பாக உலக பணக்காரர்களில் ஒருவரும், ட்விட்டர் நிறுவன CEO எலான் மஸ்க்'கின் தற்போதைய பதிவு பலரின் கவனத்தை பெற்றுள்ளது.

வாக்குப்பதிவு இயந்திரங்களை ஒழிக்க வேண்டும், AI அல்லது மனிதர்களால் எளிதில் ஹேக் செய்யக்கூடிய ஆபத்து அதிகமாக இருக்கிறது என்றும் வாக்குச்சீட்டு வாக்குப்பதிவு முறைக்கு திரும்ப வேண்டும் அவர் ட்விட் செய்திருந்தார்.

Rajeev chandrasekar elon musk

இதற்கு பதிலளித்த மத்திய தகவல் தொழில்நுட்பத்துறையின் முன்னாள் இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், “இந்திய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மிகவும் பாதுகாப்பானவை, வெளிப்புறத்தில் இருந்து ஹேக் செய்ய முடியாதவை.” என்று பதிவிட்டார். அதற்கு பதிலளித்துள்ள மஸ்க், “எதையும் ஹேக் செய்யலாம்” என குறிப்பிட்டுள்ளார்.

Rahul gandhi smiling

இந்த கருத்து பரிமாறலின் போது தான், எலான் மஸ்க்கின் கருத்தை வரவேற்றுள்ளார் ராகுல்காந்தி, அவர் பதிவிடுகையில், இந்தியாவில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒரு கருப்பு பெட்டி.

அவற்றை யாரும் ஆராய அனுமதிக்கப்படுவதில்லை. தேர்தல் ஆணையம் பொறுப்பபில்லாமல் செயல்படும் போது ஜனநாயகம் மோசடிக்கு ஆளாகிறது என பதிவிட்டுள்ளார்