தொடர்ந்து சரியும் மதிப்பு - உலக பணக்காரர் என்ற அந்தஸ்தை இழந்த எலான் மஸ்க்..? முதலிடத்தில் இவரா..?
டெஸ்லா நிறுவனத்தின் பங்குகள் சரிந்ததன் அடிப்படையில் உலக பணக்காரர் என்ற அந்தஸ்தை எலான் மஸ்க் இழந்துள்ளார்.
எலான் மஸ்க்
டெஸ்லா நிறுவனத்தின் ஷேர் மதிப்பு விண்ணை தொட்டு வரும் நிலையில், உலகிலேயே பெரும் பணக்காரராக நீடித்து வந்தார் எக்ஸ் தளத்தின் உரிமையாளர் எலான் மஸ்க் இருந்து வந்தார்.
ஆனால், அண்மைகாலமாக தொடர்ந்து டெஸ்லா நிறுவனத்தின் ஷேர் குறைந்த நிலையில், $197.7 billion சொத்து மதிப்புடன் எலான் மஸ்க் தற்போது உலக பணக்காரர் பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.
ஜெஃப் பெசோஸ்
அவரை விட அதிகமான சொத்து மதிப்புடன் அமேசான் நிறுவனத்தின் CEO ஜெஃப் பெசோஸ் பணக்காரர்கள் பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
அவரின் சொத்து மதிப்பு சுமார் $200.3 billion என கணக்கிடப்பட்டுள்ளது.
2021ஆம் ஆண்டுக்குப் பிறகு, உலகின் மிகப் பெரிய பணக்காரர்கள் பட்டியலில் பெசோஸ் முதலிடத்தைப் பிடிப்பது இதுவே முதல்முறையாகும் என்பது இதில் குறிப்பிடத்தக்கது.